என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayam"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
    • கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கீழ ஆம்பூர் ஊராட்சி மன்றம் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் கொலை செய்ய ப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரை பார்த்த போலீசார் புகைப்படம் எடுத்ததோடு, அவரை மதுரைக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மீண்டும் கடையத்திற்கு வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தற்போது வரை அவர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்பது தெரிய வில்லை. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்தை அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
    • தொண்டைமான் குளம், கோணப் பெருமாள் குளம், அத்தியூத்து குளம் உள்ளிட்ட பல்வேறு குளக்கரைகளில் பனைவிதைகள் நடப்பட்டன.

    கடையம்:

    கடையம் யூனியனுக் குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி மற்றும் மேட்டூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து கடையம் பகுதியிலுள்ள பல்வேறு குளக்கரைகளில் சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர். நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி குளங்கள், ஊராட்சி ஒன்றிய குளங்கள், பொதுப்பணித்துறை குளங்கள் ஆகியவை அடங்கும். சென்னல் தாபுதுக்குளம், இலவந்தா குளம், தொண்டைமான் குளம், கோணப் பெருமாள் குளம், அத்தியூத்து குளம், செட்டியூரான்குளம், தெற்கு நொச்சிகுளம், உலகளந்தா பிள்ளை குளம், வேட்டைகாரன் குளம், புங்கன்குளம், ஆலடிகுளம், அனந்த பத்மநாயக்கன்குளம், வடக்கு நொச்சி குளம், பிள்ளைகுளம் மற்றும் மேல வவ்வால் குளம், திருஅம்பலப்பேரி குளம், பாணான்குள விரிசு திருத்தடி குளம் போன்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பனைவிதைகள் நடப்பட்டன. இதில் புனித ஜோசப் கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, தொழிலதிபர் ரவி, ஊராட்சி செயலர் பாரத், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கடையம் அருகே உள்ளது பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து மனிதர்களை தாக்கி வருகிறது.
    • வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்தறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ளது பெத்தான்பிள்ளை குடியிருப்பு. இப்பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து மனிதர்களை தாக்கி வருகிறது.

    கரடி தாக்கியது

    மேலும் ஆடுகள் மற்றும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. கடந்த 6-ந்தேதி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் புகுந்த கரடி ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு வியாபாரியை தாக்கியது. அதனை தடுக்க சென்ற மேலும் 2 பேரையும் கடித்து தாக்கியது.

    பலத்த காயமடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று திடீரென இறந்தது. பின்னர் அது களக்காடு அடர்வனப்பகுதியான செங்கல்தேரியில் எரிக்கப்பட்டது.

    மீண்டும் நடமாட்டம்

    இந்நிலையில் பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த ஒருவர் நேற்று பணிக்கு சென்றுள்ளார். அப்போது கடந்த 6-ந்தேதி கரடி நின்ற அதே இடத்தில் மீண்டும் ஒரு கரடி நின்றுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் பொது மக்களிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்தறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிர்ச்சி

    ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு 3 பேரை கரடி கடித்து குதறிய நிலையில் மீண்டும் கரடி நடமாட்டம் உள்ளதை அறிந்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கருத்தபிள்ளையூர், சிவசைலம், பெத்தான் பிள்ளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மாணவ-மாணவிகள் ஆழ்வார்கு றிச்சி உள்ளிட்ட பகுதியில் படித்து வருகின்றனர்.

    மாணவர்கள் தயக்கம்

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரடி புகுந்த சம்பவத்தால் அச்சம் காரணமாக கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சில மாணவர்கள் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று 3-வது நாளாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.

    இது தொடர்பாக அப்பகு தியினர் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் நாங்கள் பதட்டத்துடனே வாழ்ந்து வருகிறோம். எனவே இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும். எங்கள் பகுதியில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தி கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கூறினர்.

    கரடி நடமாட்டம் குறித்து அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறு கையில், பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஒரு முதியவர் கரடியை பார்த்ததாக கூறுகிறார். இதனால் அந்த பகுதியில் கரடி வராமல் இருப்பதற்காக வாகன டயர்களை எரிக்க வனத்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் 24 மணி நேரமும் தலா 10 பேர் கொண்ட 2 குழுக்கள் அங்கு சுழற்சி முறையில் ரோந்து சென்று வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதியானால் உடனடியாக அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தேவையான மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    • பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந் தேதி புகுந்த கரடி 3 பேரை பயங்கரமாக கடித்து தாக்கியது.
    • இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந் தேதி புகுந்த கரடி 3 பேரை பயங்கரமாக கடித்து தாக்கியது.இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    அதன் பின்னர் அந்த கரடி வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது.

    மீண்டும் கரடி நடமாட்டம்

    இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நெல்லை கள இயக்குனர் பத்மாவதி உத்தரவின் பேரில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா அறிவுறுத்தலின்படி, கடையம் வனச்சரகர் கருணா மூர்த்தி தலைமை யில் 48 பேர் கொண்ட குழு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வனத்துறையினர் நடவடிக்கை

    அவர்கள் கரடி ஊருக்குள் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினர் மண்எண்ணை நிரப்பிய தீப்பந்தம் கொண்டும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பிளாஸ்டிக் துப்பாக்கி மற்றும் ஒலி எழுப்பான் மூலமாகவும் சத்தத்தை எழுப்பி வருகின்றனர். மேலும் சைக்கிள் டயர்களில் தீ வைத்தும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    எனினும் கரடி நடமாட்டம் குறித்து தடயங்கள் சிக்கவில்லை. இதுதொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கூறியதாவது:-

    48 பேர் குழு

    வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவல் குழுவினர் அடங்கிய 48 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக கரடி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

    சம்பந்தப்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரடி வரும் வழித்தடங்களும் கண்கா ணித்து வருகிறோம். இதுவரை கரடி வந்ததற்கான கால் தடங்கள் கிடைக்கவில்லை. காமிரா காட்சிகளிலும் கரடியின் உருவம் பதிவாகவில்லை.

    எனினும் முன் எச்சரிக்கை காரணமாக பொது மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கரடி நடமாட்டம் கண்டறியப் பட்டால் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். பொது மக்கள் கரடி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்டர் சேவியர்துரைசிங், வார்டு உறுப்பினர் வயலட் அல்லேலுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு, கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை பற்றி பேசினார். முகாமில் கல்வித்துறை சார்பாக மகேஷ் குமார், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக சரவணன், தோட்டக்கலைத்துறை பானுமதி, சமூக நலத்துறை சார்பாக கார்த்திகேயன், சுகாதாரத்துறை ஆனந்தன், கால்நடைத்துறை சஹானா மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.

    • அணைந்த பெருமாள் நாடானூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் வீடுகளில் விரிசல் விழுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் மற்றும் அணைந்த பெருமாள் நாடானூர் கிராம பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் தனியார் குவாரி ஒன்றுக்கு மீண்டும் கல் உடைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரி முன்பு செயல்படும்போது வீடுகளில் விரிசல் விழுந்ததாகவும் குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், முதியோர் போன்றோர் பாதிக்கப்படுவதாகவும் வீடுகளில் விரிசல் விழுவதாகும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் அழகுதுரை மற்றும் முத்தமிழ் செல்வி ரஞ்சித் ஆகியோர் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

    • தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனைப்படி நடைபெற்றது.
    • தலைவராக கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கடையம்:

    கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனைப்படி நடைபெற்றது. அதில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் ,செயலாளராக மந்தியூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளராக முதலியார் பட்டி ஊராட்சி தலைவர் முகைதீன் பீவி அசன், துணைத் தலைவராக வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அடைச்சானி மதியழகன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, வீரா சமுத்திரம்ஜீனத் பர்வீன் யாஹுப் , தர்மபுர மடம் ஜன்னத் சதாம் , மேல ஆம்பூர்குயிலி லட்சுமணன் , சிவசலம்மலர் மதிசங்கரபாண்டியன் , ஏ.பி.நாடானூர் அழகு துரை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டமைப்பின் தலைவர் கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நன்றி கூறினார்.

    • பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலை பார்வையிட்டார்.
    • ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

    கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு கோப்புகள், பதிவேடுகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொட்டல்புதூர் கிராமத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலையும் பார்வை யிட்டார். தொடர்ந்து அவர் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.56 லட்சம் மதிப்பீட்டில் மைலப்பபுரம் முதல் நெல்லையப்பபுரம் வரை அமைக்கப்பட்ட சாலை யையும், வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45.10 லட்சம் மதிப்பீட்டில் ராஜாகுடியிருப்பு முதல் கருத்தலிங்கபுரம் வரை அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வெங்கடாம்பட்டி கிராம ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், செயலாளர் மாரியப்பன் ரவண சமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன், கோவிந்தப்பேரி பஞ்சாயத்து தலைவர் டி.கே. பாண்டியன், கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் . வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடையத்தில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மறைந்த வியாபாரிகள் சங்க தலைவர் சந்தோஷ் நாடார் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடையம்:

    கடையத்தில் வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மறைந்த வியாபாரிகள் சங்க தலைவர் சந்தோஷ் நாடார் உருவப்படம் திறக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் புதிய தலைவராக செயற்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் தொழிலதிபர், ஸ்ரீநாத் ஏஜென்சி மற்றும் கே.எஸ்.எம்.நடராஜ நாடார் கீழமரக்கடை உரிமையாளர் முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

    • விழாவில் நந்தீஸ்வரருக்கு மஞ்சள் அபிஷேகம், சந்தண அபிஷேகம், மூலிகை அபிஷேகம் உள்பட பலவகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் வில்வவனநாதர்- நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விழாவில் நந்தீஸ்வரருக்கு மஞ்சள் அபிஷேகம், சந்தண அபிஷேகம், மூலிகை அபிஷேகம், விபூதி அபிஷேகம், தயிர் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பலவகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.இதைத் தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வெங்கடாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் வட்டார மருத்துவ அதிகாரி பழனிகுமார், சித்த மருத்துவர் ரத்னா தேவி மற்றும் வட்டார அலுவலர்கள்கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமையில், துணைத் தலைவர் சித்ரா பாபு, வார்டு உறுப்பினர் தமிழ் செல்வி ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் கலைஞரின் வரும் முன் காப்போம் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அதிகாரி பழனிகுமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், மருத்துவர்கள் அன்வர்தீன் ,முகமது முபாரக், ரம்யா மர முத்துலட்சுமி, பாண்டியராஜன், சித்த மருத்துவர் ரத்னா தேவி ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
    • முகாமில் 134 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்

    கடையம்:

    தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு முகாம் கடையம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தெற்கு கடையம் கவுன்சிலர் மாரிகுமார் தலைமை தாங்கினார்.கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் கவுன்சிலருமான ஜெயக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிர காஷ்,ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன், ரம்யா ராம்குமார், மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் 134 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    ×