என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பங்களை"

    குமாரபாளையத்தில் சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மின்சார வாரிய அலுவ லகம் மற்றும் பவர்ஹவுஸ் அருகிலேயே சில மின்கம்பங்கள் சாலை நடுவில் உள்ளது. 

    இந்த மின் கம்பங்களால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரிதும் இடையூறாக உள்ளது.  

    இந்த கம்பங்களால் விபத்துகள் ஏற்படுவதற்குள் சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையின் ஓரமாக  நடப்பட வேண்டும் என வாகன  ஓட்டிகளும் பொதுமக்களும் மின் வாரிய  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×