என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330921
நீங்கள் தேடியது "Editing"
11-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.
சேலம்:
1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதி வருகின்றனர். இதில் 12-ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. மற்றவர்களுக்கு வருகிற 28-ந் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது.
இதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்வு நிறைவடைய இருக்கிறது.
இதில் 12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அதன்படி சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்துவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அதிகாரிகளுடன் சமரசம் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X