என் மலர்
நீங்கள் தேடியது "தலா"
சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 82 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின் (பி.எம்.கிசான் திட்டம்) மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திடடத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு 11-வது தவணையாக ரூ.21,000 கோடியை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுடைய வங்கி கணக்கில் தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. 10-வது தவணை பணம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி புத்தாண்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 475 விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளின் மூலம் உழவர் கடன் அட்டை (கிசான் கார்டு) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.