என் மலர்
நீங்கள் தேடியது "Rider"
சேலம் குரங்கு சாவடியில் சைக்கிளில் சென்றவர் கிரேன் மோதி பலியானார்.
சேலம்:
சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 62). இவர் இன்று காலை சேலம் குரங்குசாவடி தனியார் ஓட்டல் முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .
தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.