என் மலர்
நீங்கள் தேடியது "Crane"
- காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.
- இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது.
விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் ராஜஸ்தானில் காரின் விண்ட்ஸகிரீனில் ஒட்டகம் ஒன்று மாட்டிக்கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் நடந்த இந்த சமபவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் ஒட்டகம் காரின் முன்புற கண்ணாடியான விண்ட்ஸகிரீனில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் வலியில் துடிப்பது பதிவாகியுள்ளது. நொஹார் நோக்கி இரவு நேரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த நபர் ஒட்டகம் வழியில் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார்.
இதனால் காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். வெகு நேரமாக வலியில் துடித்த ஒட்டகம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது.

- விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை.
சென்னை பாலவாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது, கிரேன் மூலம் தூக்கியபோது எடை தாங்காமல் விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்தது.
இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிலை உடைந்து விழுந்ததற்கு போலீசார் அவசரப்படுத்தியதே காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் ஒருவழியாக பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரேன் மூலம் தூக்கியபோது விநாயகர் சிலை உடைந்து விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருக்க கடற்கரை முழுதும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.