என் மலர்
நீங்கள் தேடியது "Move"
- சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வனத்துறையினர் வைத்துள்ளனர்.
- மலையின் உச்சியில் பதுங்கி இருந்தால் அதனுடைய நடமாட்டம் தெரியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காங்கயம்
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலையடிவார பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. மேலும் ஆட்டுபட்டி அருகே இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தூக்கிச்சென்றது. இதுவரை சுமார் 6 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 2 நாய்கள் ஆகியவற்றை சிறுத்தை வேட்டையாடி உள்ளது.
இதனால் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்குள் வனத்துறையினர் விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என ஊதியூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதி மற்றும் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை குறித்த தகவலோ, கால்தடங்களோ, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளிலோ சிறுத்தை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆடுகளும் மாயமாகவில்லை.20 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தை எங்கு இருக்கிறது என தெரியாமல் உள்ளது. மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் தினசரி வந்து போகும் இடங்கள், தண்ணீர் குடிக்க வரும் இடங்கள், கூண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
மேலும் வன விலங்குகள் வேட்டையாடப்பட்ட அறிகுறிகளும் கிடைக்க வில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிறுத்தை வேறுபகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது மலையின் உச்சியில் பதுங்கி இருந்தால் அதனுடைய நடமாட்டம் தெரியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பின்னர் சிறுத்தையின் தகவல் குறித்து உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும், புகைப்படக் கண்காட்சி பேருந்து இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்தது.
அதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வை யிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் சார்பில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடியாக சென்று ஏராளமான மாணவ - மாணவிகளால் பார்வையிடப்பட்டு வருகிறது.
இந்த பேருந்தானது இன்று நமது மாவட்டத்திற்கு வந்துள்ளது. இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை நமது மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் வ.உ.சிதம்பரனார் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, நூலகர் (ஓய்வு) முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.