search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national level"

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் வள்ளியூர் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
    வள்ளியூர்:

    திருவனந்தபுரத்தில் கேரளா இறகுபந்து அகாடமி சார்பில் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 4-ம் ஆண்டு அகில இந்திய பெண்கள் இறகுபந்து போட்டி நடைபெற்றது.

    இப் போட்டியில் தேசிய அளவிலான அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.
    இரட்டையர் பிரிவினருக்கான இறுதி போட்டியில் வள்ளியூர் எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியும் அசாம் மாநில அணியும் மோதியது. எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியில் அதன் கோச்சர் பிரியா கவின்வேந்தன் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த போன்ஷியா ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆடினர்.

    இந்த அணி அசாம் அணியை தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  மேலும் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரியா கவின்வேந்தன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

     வெற்றி பெற்ற வீராங்கனைகளை வள்ளியூர் வணிகர் நலச்சங்க தலைவர் எட்வின் ஜோஸ், இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சங்கரவெங்கடேசன், அரசு மருத்துவர் கவிதா சங்கரவெங்கடேசன், வழக்குரைஞர்கள் கல்யாணகுமார், ராஜஜெகன், தெட்சணமாறநாடார் சங்க கல்லூரி பேராசிரியர்கள் பாலமுருகன், புஷ்பராஜ், மேக்ரோ ஐ.டி.இ. தாளாளர் பொன்தங்கதுரை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
    தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    தூத்துக்குடி:

    மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த 27 -ந்  தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி ரஜோ ஸ்கட்டிங் கிளப்பை சேர்ந்த 11 மாணவர்கள் பயிற்சியாளர் ராஜேஷ் பாலன் தலைமையில் தமிழ்நாட்டிற்காக களமிறங்கி 9 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வென்று புள்ளி பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்தனர். 

    இப்போட்டியில் மும்பை, கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், நாக்பூர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய பகுதிகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    ×