என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331176
நீங்கள் தேடியது "meeting with Rick owners"
திருச்செங்கோட்டில் ரிக் உரிமையாளர்களுடன் வங்கி மேலாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரிக் உரிமை யாளர்கள், வங்கி மேலாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்.
திருப்பூர் டெக் மாவட்ட தலைவர் திருமூர்த்தி, ஈரோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியம், திருச்செங்கோடு சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, உதவி செயலாளர் முருகவேல், பொருளாளர் ஜெயக்குமார், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வங்கிகள் சார்பில் சுந்தரம் பைனான்ஸ் கண்ணன், கனரா வங்கி மேலாளர் அகிலா, இந்தியன் வங்கி பிரசன்னா, எஸ் பேங்க் நித்திஷ் குமார், ஆக்சிஸ் பேங்க் சித்திக், கனரா வங்கி முன்னாள் மேலாளர் தனசேகர், கரூர் வைஸ்யா பேங்க் மேலாளர் சிவக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சரவணன், யூனியன் பேங்க் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரிக் உரிமையாளர்கள் செல்வராஜ், தனபால், விஜியகுமார், முருகேசன், சக்திவேல் ஆகியோர் பேசுகையில், கொரோனா மற்றும் டீசல் விலை உயர்வு, தொடர் மழைக்காலம் போன்றவற்றால் எங்களது தொழில் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
ஆண்டுக்கு ரூ.15 லட்சம் நஷ்டம் ஏற்படுவதால் கூலி கொடுக்கவே முடியாத நிலை உள்ளது. இதனை காரணம் காட்டி கடனை கட்ட மறுக்கவில்லை. எங்களது இ.எம்.ஐ. தொகையை பாதியாக குறைத்து கட்டவும், வரும் தொடர் மழைக் காலத்தை ஒட்டி 6 மாதம் தவணை கட்ட கால அவகாசம் தரும்படியும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் வண்டிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்து பேசிய வங்கி தரப்பினர் சங்கத்தின் மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால் எங்கள் மேலதிகாரிகளுக்கு சொல்லி எங்களால் முடிந்த அளவு உதவி செய்கிறோம்.என கூறினார்கள்.
கூட்டத்தில் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கிகளுக்கும் மனு கொடுத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X