என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசனை திரவியம்"

    • கார்த்திகை மாதம் 3-வது சோமவாரத்தை முன்னிட்டு நடந்தது
    • திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் குகநாதீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையான இன்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 6.30மணிக்கு அபிஷேகமும் 8மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை 10.30 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு அலங்கார தீபாராதனைநடந்தது.

    பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3முறை வலம் வரும்நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடக்கிறது.பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3முறை சங்குஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம் வரசெய்கின்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப் படுகி றது. இதற்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துவருகின்றனர்.

    • வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை சுத்தம் செய்ய வேண்டும்.
    • தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    நம்முடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.

    ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தை இல்லத்தரசிகள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆர்வம் இருப்பவர்கள் இதை சுயதொழிலாகவும் செய்யலாம். தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பதற்கு பெரிய அளவு முதலீடோ, அதிக பணியாளர்களோ தேவை இல்லை. இதற்கான மூலப்பொருட்கள் ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மினரல் வாட்டர்- 4 லிட்டர்

    பேக்கிங் சோடா - 100 கிராம்

    சிட்ரிக் அமிலம் - 50 கிராம்

    வினிகர் - 250 மி.லி.

    சோடியம் ஹைப்போ குளோரைடு - 500 மிலி,

    சோடியம் லாரில் ஈதர் சல்பேட்- 100 .46.

    லெமன் கிராஸ் அரோமா எண்ணெய்- 25 மிலி

    செய்முறை

    பிளாஸ்டிக் வாளியில் மினரல் வாட்டரை ஊற்றவும். பேக்கிங் சோடாவை சிறிது சிறிதாக அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் சோடியம் லாரில் ஈதர் சல்பேட் திரவத்தை ஊற்றி கலக்க வேண்டும். இது தண்ணீர் நுரைப்பதற்கும், தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும் உதவும். அடுத்ததாக, சிட்ரிக் அமிலத்தை சிறிது சிறிதாக இந்த கரைசலில் ஊற்றி கலக்க வேண்டும். இப்போது கரைசல் நுரைத்து பொங்கத் தொடங்கும். எனவே நிதானமாகவும், கவனமாகவும் கலக்க வேண்டும்.

    நுரை அடங்கியவுடன் வினிகர், சோடியம் ஹைப்போ குளோரைடு, லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கரைசலில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நன்றாக முடி 24 மணி நேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். பின்னர் மூடியைத் திறந்து திரவத்தை வடிகட்டி சுத்தமான, ஈரமில்லாத பாட்டில்களில் ஊற்றி வைக்கலாம்.

    தரை துடைக்கும்போது ஒரு வாளி நீருக்கு சில சொட்டுகள் வீதம் இந்த திரவத்தை ஊற்றி கலக்கினால் போதுமானது. தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை செலவாகும். இது குறைந்த செலவில் தரமாக இருப்பதோடு, சுயதொழிலாக மேற்கொண்டால் லாபம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை மற்றும் நிறத்துக்கு பல்வேறு பொருட்களை கலந்து கொள்ளலாம்.

    • உங்கள் உடைக்கு இன்னும் அழகூட்டும். மேலும், உங்களைத் தனித்துக் காட்டும்.
    • அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் இரசிக்கும்படியாக இருக்க வேண்டும்.

    உடையை அழகாகவும், சுத்தமாகவும் அணிந்துகொள்ள விரும்புகிறோம். அது போல உங்களுக்கு ஏற்ற பர்ஃயூமைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது, உங்கள் உடைக்கு இன்னும் அழகூட்டும். மேலும், உங்களைத் தனித்துக் காட்டும்.

    முதலில் என்னனென்ன பர்ஃயூம் (fragrance)இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதில் நமக்குப் பொருந்தும் பர்ஃயூமை எப்படி தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.

    வகைகள்

    சிட்ரஸ் – சிட்ரஸ் பழங்களின் மணம் கொண்டது. எலுமிச்சை, மாண்டரின்(சீன ஆரஞ்சு), பெர்காமோட்(எலுமிச்சை, கிச்சிலி இன வகை) போன்ற நறுமணங்கள்.

    அரோமேட்டிக் – லாவெண்டர், லெமன் க்ராஸ், அனீஸ் போன்ற நறுமணங்கள்.

    ப்ளோரல்(பூ) – ரோஸ், ஜாஸ்மின், லீலாக் போன்ற நறுமணங்கள்.

    க்ரீன்(பச்சை) – புல், கல், இலை போன்ற நறுமணங்கள்.

    ப்ரூட்டி(பழங்கள்) – ரேஸ்ப்பெர்ரி, பியர், பீச் போன்ற நறுமணங்கள்.

    ஸ்பைஸஸ்(மசாலா) – கிராம்பு, ஜாதிக்காய், பட்டை போன்ற நறுமணங்கள்.

    வூடெட்(மரம்) – சிடார்(கேதுரு), பட்சவுளி(குளவி), மோஸ்(பாசி) போன்ற நறுமணங்கள்.

    பால்சாமிக் – வெண்ணிலா, ஹெலியோட்ரோப், டோங்கா பீன் போன்ற நறுமணங்கள்.

    பர்ஃயூம் எண்ணெய் எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பதை வைத்து, எது தரமான பொருள் என்றும் கண்டறியலாம்.

    30 சதவிகிதம் பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 6 முதல் 8 மணி நேரம்வரை வாசனை இருக்கும்.

    5 சதவிகிதம் மட்டுமே பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 2 முதல் 3 மணி நேரம்தான் அதன் வாசனை இருக்கும்.

    இப்படி வாசனை திரவியத்தின் எண்ணெயின் சதவிகிதத்தைக் கொண்டும், பாட்டில் அளவைக்கொண்டும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    உங்களுக்கான நறுமணத்தை எப்படி தேர்வு செய்வது ?

    பர்ஃயூமின் மனம் (perfume/scent) ஒவ்வொருவருடைய உடல் தன்மைக்கேற்ப மாறுபடும். ஒவ்வொருவருக்கும், அவர்களின் ஹார்மோன், ஃபெரோமோன் பொருத்து பர்ஃயூமின் மனம் ஓங்கியோ அல்லது மங்கியோ இருக்கும். அதனால் அவரவர் மணிக்கட்டில் நீங்கள் வாங்க நினைக்கும் பர்ஃயூமை ஸ்ப்ரே செய்து, கொஞ்ச நேரத்திற்கு பின் முகர்ந்து பாருங்கள். பிறகு முடிவெடுங்கள்.

    உங்களால் கடைக்குச் சென்று தேர்வு செய்ய முடியவில்லை என்றால் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். தள்ளுபடி உள்ள பர்ஃயூமை பார்த்து மயங்கி விடாதீர்கள். ஆன்லைனில் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் தேர்ந்தெடுப்பதற்குமுன் அவர்கள் சில கேள்வி பதில்கள் வைத்திருப்பார்கள். அதை சரியாக செய்து, ஒவ்வொற்றிற்கும் தகுந்த விளக்கம் இருக்கும், அவற்றையும் சரியாக படிக்க வேண்டும். பிறகு உங்களுக்கான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.


    மேலும், நீங்கள் என்ன மாதிரியான உடை அணிகிறீர்கள், எந்த இடத்திற்கு செல்கிறீர்கள், எங்கு அதிகமாக இருக்கிறீர்கள் போன்றவற்றை மனதில் கொண்டு உங்களுக்கான பர்ஃயூமை தேர்ந்தெடுங்கள்.

    நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியம் நீங்கள் வருவதற்குமுன் சில அடி தூரம்வரை மனம் வீசி நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை தெரிவித்துவிடும். அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் இரசிக்கும்படியாக இருக்க வேண்டும். முகம் சுளிக்கும் படியாக இருக்கக் கூடாது.

    முதலில் எந்த கம்பெனி பர்ஃயூம் வாங்கப்போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். பிறகு, அந்த கம்பெனியில் இருக்கும் மற்ற இரகங்களை ஆராய்ந்து உங்களுக்கான ஒரு பர்ஃயூமை தேர்வு செய்யுங்கள்.

    பார்க் அவென்யூ, ஃபாக், ஃபாரெஸ்ட் ஸ்பைஸ், யார்டலே, ப்ளாக் ஜாக், ஜியோர்ஜியோ அர்மானி, பெர்பெர்ரி பார் வுமன் , குச்சி, ரெவ்லான் சார்லி ரெட் பர்ஃயூம்,கால்வின் கிளைன் போன்றவை இந்தியாவில் பெண்களுக்கான (women) முதன்மை பர்ஃயூம்கள் ஆகும்.

    12 ஆண்டுகள் வரை இதிலிருந்து பூக்கள் பறிக்கலாம்.

    உடுமலை:

    வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிகளவு உத்தரகாண்ட் மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கு உள்ளதை போலவே கேரளா மாநிலம், மறையூர் அருகிலுள்ள காந்தலூர், கொழுந்த மலை பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் வாசனை திரவியம் உற்பத்திக்காக ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு பிங்க், மெரூன், ஸ்பானிஷ் யெல்லோ, ரூபி போன்ற வகையான ரோஜா செடிகள், உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து வாங்கி வரப்படுகிறது. அதே குளிர் சீதோஷ்ணம் நிலவும் காந்தலூர் மலைப்பகுதியில் சாகுபடி செய்து தினமும் 500 கிலோ ரோஜா பூக்கள் அறுவடை செய்து பெங்களூரு, வாசனை திரவிய உற்பத்தி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    வாசனை திரவியங்களுக்கான மலர் சாகுபடி முதல் முறையாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயி ஜான் பிரிட்டோ கூறியதாவது: -

    பெரும்பாலும்வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்களுக்கு தேவையான மலர் வகைகள், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கு சென்று இதற்கான பயிற்சி பெற்று வந்தேன். அங்கிருந்து வாசனை அதிகம் உள்ள நான்கு வகையான ரோஜா செடிகள், 30 ஆயிரம் வாங்கி வந்து நடவு செய்யப்பட்டுள்ளது. நடவு செய்த 3 மாதத்தில் பலன் கொடுக்க துவங்கியுள்ளது.

    12 ஆண்டுகள் வரை இதிலிருந்து பூக்கள் பறிக்கலாம். தினமும் சராசரியாக 500 கிலோ மலர்கள் கிடைக்கின்றன. பறித்தவுடன் பெங்களூரு நிறுவனத்தின் பிரீஷர் வாகனத்தில் வந்து கிலோ 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்கின்றனர். 80 கிலோ பூவிலிருந்து ஒரு லிட்டர் வாசனை திரவியம் அங்கு உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு லிட்டர் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது சென்ட், அழகு சாதன பொருட்கள், ஆயுர்வேத மருந்துகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தில் முதல் முறையாக வாசனை திரவியத்திற்காக, மலர் சாகுபடி முதலில், இப்பகுதியில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஜான் பிரிட்டோ தெரிவித்தார்.

    ×