என் மலர்
நீங்கள் தேடியது "விற்றவர்"
- தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
- போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியைசேர்ந்த அழகேசன் (வயது 65). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற தாரமங்கலம் போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.
- பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நுழைவுபாலம் அருகே 2 பேர் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்தனர்.
- சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி நுழைவு பாலம் அருகே பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நுழைவுபாலம் அருகே 2 பேர் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்தனர். சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காவேரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 26) என்பதும் அதேபகுதியை சேர்ந்த மற்றொருவர் நீலகண்டன் (30) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.