search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் டைட்டன்ஸ்"

    நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்களை குவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்தார்.    

    குஜராத் சார்பில் ஷமி, யாஷ் தயாள், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 2வது பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் பொறுபுடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் வேட் 35 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் பாண்ட்யா நிதானமாக ஆடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த டேவிட் மில்லர் அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், குஜராத் அணி 3 விக்கெட்டை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 40 ரன்னுடனும், மில்லர் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.
    ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 22 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னில் நடையை கட்டினார். தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஏமாற்றினார். ஓரளவு தாக்குப் பிடித்து ஆடிய ஜோஸ் பட்லர் 39 ரன்னில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும், டிரெண்ட் போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது. 

    குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

    கொரோனா பரவலால் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா நடைபெறாத நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஐபிஎல் நிறைவு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். இந்த போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர்.

    இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
    குஜராத் அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது என கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியினர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் வெற்றிக் கோப்பையை ஊர்வலமாக சென்றனர்.

    கோப்பையுடன் சென்ற வண்டியில் குஜராத் அணி வீரர்கள் உடனிருந்து வெற்றி கோஷங்களை எழுப்பினர். வழியெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர்.
    ×