என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத் டைட்டன்ஸ்"
- பலமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
- பேட்டிங்களில் சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
அறிமுக சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் சாம்பியன் பட்டம், 2-வது வருடம் இரண்டாவது இடம் பிடித்தது. கடந்த வருடம் சுப்மன் கில் தலைமையில் பிளேஆஃப் சுற்றை கூட எட்ட முடியாத நிலையில், இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழும் முனைப்பில் உள்ளது.
பேட்ஸ்மேன்கள்
சுப்மன் கில், ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஷெர்பேன் ரூதர்போர்டு, கிளென் பிலிப்ஸ்
ஆல்-ரவுண்டர்கள்
நிஷாந்த் சிந்து, மஹிபால் லாம்ரோர், வாஷிங்டன் சுந்தர், முகமது அர்ஷத் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், கரிம் ஜனத், சாய் சுதர்சன், ஷாருக் கான்.

பந்து வீச்சாளர்கள்
ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், ஜெரால்டு கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், இஷாந்த் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, ராகுல் டெவாட்டியா, ரஷித் கான்
தொடக்க பேட்ஸ்மேன்கள்
சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். தற்போது ஜாஸ் பட்லர் அணியில் இணைந்துள்ளார். இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் என்பதில் அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சமீப காலமாக சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியில் பேட்டிங் கிளிக் ஆகிவிட்டால் பட்டைய கிளப்ப வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டர்தான் சற்று பலவீனமாக உள்ளதாக தோன்றுகிறது. சுப்மன் கில், பட்லர் தொடக்க வீரராக களம் இறங்கினால் சாய் சுதர்சன் 3-வது வரிசையில் களம் இறங்குவார். அதன்பின் கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், லாம்ரோர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் முகமது அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுக்க முடியும்.

வேகப்பந்து வீச்சாளர்கள்
ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த சர்மா முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், கெஜ்ரோலியா உள்ளனர். ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
சுழற்பந்து வீச்சில்
ரஷித் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், வாஷிங்டன் சுந்தர், டெவாட்டியா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களுடன் மானவ் சுதர் உள்ளார். பிலிப்ஸ், ஷாருக் கானும் சுழற்பந்து வீசக் கூடியவர்கள். இதில் ரஷித் கான், சாய் கிஷோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.
வெளிநாட்டு வீரர்கள்
பட்லர், ருதர்போர்டு, கிளென் பிலிப்ஸ், கரிம் ஜனத், ரபாடா, கோயட்சீ, ரஷித் கான் ஆகியோர் உள்ளனர். இதில் பட்லர், பிலிப்ஸ், ரஷித் கான், ரபாடா ஆகியோர் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ரபாடாவிற்குப் பதிலாக பட்லர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கலாம். பேட்டிங், பவுலிங்கை சமநிலைப் படுத்தும் வகையில் தேர்வு இருக்கும்.
- என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
- நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் இந்த சீசனில் ஒரே போட்டியில் 300 ரன்களை அடிப்போம் என்று குஜராத் அணியின் கேப்டன் கில் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கேப்டன் பொறுப்பையும் பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
பேட்டராக ஆக வேண்டும் என நான் எடுத்த முடிவு சிறந்ததென நினைக்கிறேன். பீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதிகமான பேட்டிங் செய்வது எனக்கு நல்லதாக இருக்கிறது.
கேப்டனாக இருப்பதின் சுவாரசியமான, சவாலான விஷயம் என்னவென்றால் தினமும் நீங்கள் ஒரு வீரரைப் பற்றி அல்லது உங்களைப் பற்றி புதியதாகக் கற்றுக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.
நெக்ராவிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷமானது. எங்களது சொந்த மைதானம் மிகவும் உதவியாகவே இருக்கிறது. வெளி இடங்களில் நன்றாக விளையாட வேண்டியுள்ளது.
கடைசி சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. ஆனால், அதற்காக வித்தியாசமாக எதுவும் செய்ய தோன்றவில்லை. கடைசி 3 ஆண்டுகளில் எங்களுக்குதான் அதிகமான வெற்றி விகிதம் இருக்கின்றன. அதையே கடைப்பிடித்தால் போதுமானது. இந்த சீசனும் நன்றாகவே செல்லும்.
சூழ்நிலை சரியாக இருந்தால் 240, 250 அல்லது 260 ரன்கள் அடிக்கலாம். அதற்கு மேல் அடிப்போமா தெரியாது. ஆனால், சில விக்கெட்டுகளில் 150 அல்லது 160 போதுமானதாக இருக்கலாம். சூழ்நிலைக்கு தகவமைப்பதுதான் சிறந்த அணிக்கான தகுதி.
என்று கில் கூறினார்.
- டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
- மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார்.
அகமதாபாத்:
ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் விர்திமான் சஹா 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்களிலும், விஜய் சங்கர் 19 ரன்னிலும் வெளியேறினர்.
அதன்பின், டேவிட் மில்லர்- அபினவ் மனோகர் ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அபினவ் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மில்லர் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 46 ரன்கள் அடித்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. ராகுல் தெவாட்டியா 5 பந்துகளில் 20 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட் கைப்பற்றினார். அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டாப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.
- மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது.
- குஜராத் டைட்டன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நெருங்கி விட்டது.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில் இன்று நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நெருங்கி விட்டது.
மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது.
இந்நிலையில் புற்றுநோயுடன் போராடும் அனைருடனும் தோளோடு தோள் நிற்கும் விதமாக ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி லாவண்டர் நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.
- முகமது சமி, ரஷித்கான் சென்னை அணிக்கு சவாளாக இருப்பார்கள்.
- சொந்த மண்ணில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாகும்.
முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் பலப்பரீட்டை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இர்ணடு அணி வீரர்களும் முடிந்தவரை தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது சொந்த மைதானம் என்றாலும் குஜராத் அணியை எளிதில் வீழ்த்திவிட முடியாது. கீழ் குறிப்பிட்டுள்ள மூன்று கடுமையான தடைகளை கடக்க வேண்டும்.
1. முகமது ஷமி
குஜராத் அணியின் பந்து வீச்சில் முதுகெலும்பாக இருப்பது முகமது ஷமி. சீம்-ஐ பயன்படுத்தி தனது நேர்த்தியான பந்து வீச்சால் பவர்-பிளேயில் அசத்துகிறார். இதனால் லீக் போட்டிகள் முடிவில் 14 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை பெற்றுள்ளார்.
சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் இவரை சமாளித்து ரன்கள் சேர்த்து விட்டால் சென்னை அணியின் ஸ்கோர் வெகுவாக உயரும் என்பதில் ஐயமில்லை.
2. ரஷித் கான், முகமது நூர்
பவர்பிளே ஓவர்களை கடந்த பின் சென்னை அணிக்கு சவால் கொடுக்க ரஷித் கான், நூர் முகமது காத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார்கள். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து 'ஸ்லோ' ஆக இருக்கும் என்பதால் இவர்கள் இருவருடைய பந்து வீச்சில் அதிக ரன்கள் குவிப்பது எளிதானது அல்ல. ரஷித் கானும் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நூர் முகமது 10 போட்டியில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
3. சுப்மான் கில்
இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்களுடன் 680 ரன்கள் குவித்துள்ளார். இவரது சதத்தால் ஆர்.சி.பி. அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. எந்தவொரு சூழ்நிலையிலும் விளையாடக் கூடியவர். இவரை ஆடுகளத்தில் நிற்க விட்டுவிட்டால், நேரம் செல்ல செல்ல துவம்சம் செய்து விடுவார். இவரை தொடக்கத்தில் அவுட்டாக்கிவிட்டால் குஜராத் அணியின் ரன்குவிப்பை தடுக்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மூன்று தடங்களையும் முறியடித்துவிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் குவாலிபையர்-1ல் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
- ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
- இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரஷித்கான் மாறியுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னை அணியில் பேட்டிங் வரிசை தரமாக அமைந்தாலும் பந்துவீச்சு சொல்லுபடியாக இல்லை. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
குஜராத் அணியின் பேட்டிங்குக்கு முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ரஷித்கான் மற்றும் முகமது சமி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் அவர்கள் இருவரும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
இந்நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதுபோல சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர் அதிக அளவில் நெருக்கடி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் சேர்த்தார்.
- குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.
ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.
குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.
- இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
- குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது.
ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்சும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28-ம் தேதி நடக்கும் இறுதிபோட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் 2-வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50 சதவீதம் வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா:-
குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்சுக்கு எளிதாக இருக்காது. இந்த சீசன் முழுவதும் முதலிடத்தில் இருந்த அணி குஜராத். எனவே குஜராத் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த போட்டி மிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.
இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்புள்ளது. ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம். முகமது ஷமியை மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்
என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 233 ரன்களை குவித்தது.
அகமதாபாத்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.
தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன
- குஜராத்தில் இன்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் குஜராத்தில் தற்போது நிலவும் வானிலை ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிஃபையர்- 2 போட்டியின் போதும் மழை பெய்தது.
இன்று மதிய நிலவரப்படி வானம் ஓரளவு தெளிவாக இருந்தது. ஆனாலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்குப் பிறகு போட்டி தொடங்கி குறைந்தபட்சம் 5 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், போட்டியை நடத்த மற்றொரு நாள் (ரிசர்வ் நாள்) ஒதுக்கப்படும். ஆனால், சில கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்படும். இன்று குறைந்தபட்சம் ஒரு பந்தாவது வீசப்பட்டால், ரிசர்வ் நாள் போட்டி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி நடைபெறும். இன்று டாஸ் போடப்பட்டாலும், ஆட்டம் நடக்காத சூழ்நிலையில், நாளை இரு தரப்புக்கும் 20 ஓவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு போட்டி தொடங்கும். ரிசர்வ் நாளில் மீண்டும் டாஸ் போடப்படும். அணிகளில் மாற்றம் செய்ய கேப்டன்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
- மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.
- நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டம் கடந்த 21-ந் தேதி முடிவடைந்தது.
இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் ஆகிய அணிகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.
'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.
26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குறைந்த அளவு ஓவர்கள் வைத்து கூட நடத்த இயலாமல் போனது.
இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.
9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களாக குறைக்கப்படும். 10 மணிக்கு 17 ஓவர்களாவும், 10.30 மணிக்கு 15 ஓவர்களாகவும் குறைக்கப்படும்.
நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.
அதுவும் முடியாவிட்டால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும். நள்ளிரவு 1.20 மணிக்குள் ஆடுகளம் விளையாட தயாராக இருந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும்.
சூப்பர் ஓவரும் நடத்த இயலாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்ததால் குஜராத் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும். அந்த அணி 'லீக்' முடிவில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இருந்தது. சி.எஸ்.கே. 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
இன்று மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன.
மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5-வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும். தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனி உள்ளார்.
போட்டி முழுமையாக நடைபெற்று சிறப்பாக ஆடி அணி கோப்பையை வெல்வதே நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
- தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
- இன்றும் மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது.
சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. 24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.
26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.
போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறி வருகின்றனர்.
இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.