என் மலர்
நீங்கள் தேடியது "டெம்போ"
- அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
- கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே ஓச்சவிளை பகுதியில் இருந்து அனுமதியின்றி களிமண் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்புக்காவல் ஆய்வாளர் ரெத்தினதாஸ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு டெம்போக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவற்றில் அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் இரண்டு டன் வீதம் 4 டன் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
போலீசார் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
- புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது.
- புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் அரசு அனுமதியின்றி அதிக அளவில் மண் கடத்துவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவ இடத்தை பத்மநாபபுரம் சப்- கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அனுமதியின்றி மண் கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில் நேற்று புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது பெரிய பள்ளி தெருவில் எந்த வித அரசு அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் மண் கடத்திய டெம்போ ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு யூனிட் மண் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. போலீசார் மண் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து, டெம்போ ஓட்டுநர் பைங்குளம் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 56) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை
- பலியான கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் அருகே ராம புரம் புது கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 56) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை புது கிராமம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்று கனக ராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கனகராஜ் மகன் சுஜின் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் டெம்போ டிரைவர் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பலியான கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
- டெம்போவுடன் எம் சாண்ட் மணலையும் கை ப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை புவியியலாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவி புவியியலாளர் ஸ்ரீ குமார், டிரைவர் பிரைட் ரிச்சர்ட் ஆகியோர் மணவாளக்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும்போது அங்கு எம் சாண்ட் மணல் கொண்டு சென்ற ஒரு டெம்போவை நிறுத்தினர்.
உடனே டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் டெம்போவை சோதனை செய்ததில் அதில் 1 டன் எம் சாண்ட் மணல் இருந்தது.
ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை. திருட்டுத்தனமாக எம் சாண்ட் மணல் கொண்டு செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இது பற்றி புவியியலாளர் சுரேஷ்கு மார் மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவுடன் எம் சாண்ட் மணலையும் கை ப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
- கண் இமைக்கும் நேரத்தில் டெம்போ, பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- தூக்கி வீசப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி மேரி ஏஞ்சல் (வயது 62).
இவர் நேற்று மாலை வெள்ளி கோட்டில் உள்ள ஒரு கடையில் பொருள்கள் வாங்க சென்றார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவிலை நோக்கி ஒரு டெம்போ வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் டெம்போ, பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து அவரது மகன் லீபன்ஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து நிற்காமல் சென்ற டெம்போ டிரைவரை தேடி வருகின்றனர்.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- செம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை தனிப்படையினர் வாகன தணிக்கை
- இரணியல் போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை தோட்டியோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தியபோது டெம்போ டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
டெம்போவை தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி எம்சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. டெம்போவுடன் அவற்றை பறிமுதல் செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- விசாரணையில் டெம்போவை தீ வைத்து எரித்த வாலிபர் கைது
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குழுமைகாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்கள் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
இதில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் டெம்போவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து இருந்தது தெரியவந்தது .இது குறித்து தனிப்பிரிவு எஸ். ஐ. சிவசங்கர் தனிப்பிரிவு ஏட்டு சுஜி ஆகியோர் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்பொழுது குழுமைக்காடு பகுதியில் நிறுத்தி இருந்த டெம்போவை தீ வைத்து எரித்த நபர் அவர்தான் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் தீ வைத்து எரித்த வாலிபர் ராஜேஷ் (வயது 27) என்பதும் அவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அபராதம் விதித்தனர்
- கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது
கன்னியாகுமரி:
கொற்றிகோடு சப் இன்ஸ்பெக்டர் றசல் ராஜ் தலைமையில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கலை அருகே கைசாலவிளை என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் பாறை கற்கள் உடைத்து வாகனத்தில் கடத்தபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று டெம்போவில் கருங்கல் கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவர் ஒட்டி வந்த டெம்போவையும், கருங்கல்லையும் பறிமுதல் செய்தனர்.
- பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.
இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.
இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.
இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
- டிரைவரின் கால் முறிந்தது
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 31).
இவர் நெல்லை மாவட் டத்தில் இருந்து டெம்போ வில் வாழை கண்கள் ஏற்றி கொண்டு மார்த்தாண் டத்தை அடுத்த வெட்டு மணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டெம்போ பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி உள்ளது.
இதனால் டெம்போவின் முன்பகுதி சேதம் அடைந் துள்ளது. இதில் ஏற்பட்ட விபத்தில் டெம்போ ஓட்டுநர் இசக்யப்பனின் கால் முறிந்தது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார்
- பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது
கன்னியாகுமரி :
கொல்லங்கோட்டை அடுத்த மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி இந்திரா மேபல் (53). இவர் மஞ்சத்தோப்பு பகுதியில் சுமார் 1 வருடமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடையை திறப்பதற்காக வழக்கம் போல் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தார். அப்போது அவரது கடையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அதில், சுமார் 12.30 மணிக்கு இந்த பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து இந்திரா மேபல் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.