என் மலர்
நீங்கள் தேடியது "கிடக்கும்"
அயோத்தியாப்பட்டணத்தில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் இந்த புதிய கட்டிடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
அயோத்தியாப்பட்டணம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக கட்டிடம் உள்ளது. இந்த புதிய கட்டிடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
மேலும் முறையான பராமரிப்பு இல்லாமல் நூலக வளாகத்தில் செடி, கொடி சூழ்ந்துள்ளது. இது இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுகிறது.
நூலகம் திறக்கப்படாததால் இங்கு வைத்துள்ள போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், பாட புத்தகங்கள் ஆகியவற்றை அப்பகுதியில் வசிக்கும் பட்டதாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயில முடியவில்லை.
எனவே நூலகத்தை பராமரித்து மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர நூலகத்தில் போதுமான அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.
பள்ளி , கல்லூரி விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி ெகாடுக்காமல் நூலகங்கள் அழைத்து வந்து புத்தகங்களின் சிறப்பை எடுத்துக் கூற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.