என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331551
நீங்கள் தேடியது "50 ஆயிரம் பேர்"
ஏற்காடு கோடைவிழாவை ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொேரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.
இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து, விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக்க சின்-சான் பொம்மை ,வள்ளுவர் கோட்டம் போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
சுற்றுலா பயணிகள் அமர இரண்டு குடில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர் கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பபட்டது. இதை சமாளிக்க சேலத்தில் இருந்து ஏற்காடு வரும் வாகனங்கள் திரும்பி செல்ல குப்பனூர் வழியாக திரும்பி விட பட்டனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லவும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.
நேற்று குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 6-ம் நாளான இன்று பல்வேறு துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X