என் மலர்
முகப்பு » கல்வித் திட்டங்களை
நீங்கள் தேடியது "கல்வித் திட்டங்களை"
மத்திய அரசு சார்பில் ஆசிரியர் கல்வித் திட்டங்களை செயல்முறைபடுத்த புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சேலம் :
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், கல்வி முறை, அதன் தரம் மற்றும் நடைமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றை மேற்பார்வையிட உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் பல செயல்பட்டு வருகின்றன.
தற்போது தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஆசிரியர் கல்வித் திட்டங்களை அங்கீகரிப்பதற்கான முழு செயல்முறையையும் ஒழுங்குபடுத்த ஆன்லைன் தளத்தை தொடங்கியுள்ளது.
இதில் கல்வி நிறுவனங்களின் ஆய்வு உட்பட சமீபத்தில் தொடங்கப்பட்ட 4 ஆண்டு ஒருங்கிணைந்த (Integrated Teacher Education Programme) பி.ஏ பி.எட்., பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு பயன்பாடுகளுக்கான விண்ணப்பங்கள் இந்த தளத்தில் செயலாக்கப்படும்.
இந்த தளம் என்சிடிஇ-யின் செயல்பாட்டில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வரும். இது தன்னியக்க வலுவான கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் இணையதளத்தின் `நிர்வாக உள்நுழைவு' மூலம் செயலாக்கப்படும் என என்சிடிஇ தெரிவித்துள்ளது.
×
X