என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி பெருவிழா"

    • இன்று திருக்கல்யாணம், பரிவேட்டை நடக்கிறது.
    • 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. நேற்று முன்தினம் அதிகாரநந்தி கோபுர தரிசனமும், இரவு தெருவடைச்சான் உற்சவமும் நடந்தது. இந்நிலையில் நேற்று வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா நடந்தது.

    இதற்காக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா காரணமாக வெள்ளி தேர் ஓடாததால் சக்கரம் பழுதாகி கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளி ரதம் ஓடவில்லை.

    இந்த ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் வெள்ளி ரதம் புதுப்பிக்கப்பட்டு, நேற்று வெள்ளி ரதத்தில் சாமிகள் வீதி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) திருக்கல்யாணம் பரிவேட்டை, நாளை (வியாழக்கிழமை) குதிரை வாகனம், இரவு பிச்சாண்டவர் புறப்பாடு தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது.

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் பால ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி திருவிழா உற்சவம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபும் கிராமத்தில் பழமை வாய்ந்தபாலஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

    இந்த கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு 19-ந்தேதி பால் குடம் எடுப்பதற்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

    மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டி யும் அங்கு உள்ள மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து சென்று ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. அப்போது கோலாட்டம், வாணவே டிக்கை  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×