என் மலர்
நீங்கள் தேடியது "Spirit Pocket Milk"
குமாரபாளையத்தில் அதிகாலை ஆவின் பாக்கெட் பாலை திருடிய சிறுவன் சிக்கினான்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஓ.என். தியேட்டர் பகுதியில் ஆவின் பால் விற்பனை செய்து வருபவர் சதாசிவம் (வயது 65). இவர் பல வருடங்களாக பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆவின் ஊழியர்கள் நள்ளிரவில் பால் பாக்கெட் பெட்டிகளை ஒவ்வொரு முகவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு வைத்து செல்வது வழக்கம். அதன்படி சதாசிவம் கடை முன்பும் ஆவின் பாக்கெட் பெட்டிகள் வைத்து விட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் தொடர்ந்து பால் பாக்கெட் திருடப்பட்டு வந்தது. ஆவின் ஊழியர்கள் கடை முன்பு பெட்டிகளை வைத்து விட்டு சென்ற பிறகு மர்ம நபர், அங்கு வந்து பால்பாக்கெட்டுகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இது குறித்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது ஒரு சிறுவன் அதிகாலை நேரத்தில் அங்கு வந்து பால் பாக்கெட்டுகளை திருடி செல்வதும், அந்த சிறுவன் நாராயண நகர் பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.