என் மலர்
நீங்கள் தேடியது "வீட்டுக்குள்"
பரமத்தி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). விவசாயி. இவரது பாட்டி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் அந்த கூரை வீட்டுக்குள் 6 அடி நிளமுள்ள சாரைப்பாம்பு சென்றுள்ளது. இதனால் மூதாட்டி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை விரட்டினார்கள். ஆனால் பாம்பு அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வரவில்லை.
இதுகுறித்து பிரபாகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலை–மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று வீட்டுக்குள் இருந்த 6அடி நீளமுள்ள சாரைப்பாம்பை குச்சியால் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டு அருகாமையில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.