search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 goats killed"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கொரக்கவாடி கிராம சாலையில் கொரக்கவாடி நோக்கி ராமநாதபுரம் மாவட்டம் அரியாங்குடியைச் சேர்ந்த முருகேசன் (45), இன்று காலை 5 மணி அளவில் செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது பின்னால் மினி லாரி வந்தது.

    இதனை காட்டுக்கொட்டகை,கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (28) ஓட்டி வந்தார். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியதில் 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது.

    இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஊத்துக்குளி வட்டார கிராமப்புற பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    ஊத்துக்குளி :

    திருப்பூர் ஊத்துக்குளி சாலப்பாளைத்தில் குழந்தைசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தநிலையில்  தோட்டத்திற்குள் உள்ள ஆட்டு பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் கடித்து 10 செம்மறியாடுகள் உயிரிழந்தன.

    இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றது. ஊத்துக்குளி வட்டார கிராமப்புற பகுதிகளில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும்பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. 

    இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால்நடைகளை  இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×