search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water wasted"

    கூடலூர் நகராட்சிக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.

    கூடலூர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக பொக்லைன் எந்திரம் கொண்டுதோண்டி வருகின்றனர். எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது குடிநீர் குழாய் உடைந்தது.

    இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் வீணாக ஓடியது. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    குழாயை சீரமைக்காமல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    ×