என் மலர்
நீங்கள் தேடியது "கன"
- சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
- இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஏற்காடு:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிரறது. சில பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்தாலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ய தொடங்கியது. சூறைக்கற்றுடன் சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக, ஏற்காடு - நாகலூர் சாலையில் ராட்சச சவுக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
இதன் காரணமாக ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பள்ளி மட்டும் வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் என்பதால், சாலையின் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மின்கம்பி மீது மரம் விழுந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல், அங்கே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.