என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractor"

    நெல்லை அருகே டயர் வெடித்ததால் டிராக்டரில் இருந்து குதித்த டிரைவர் பலியானார்.
    நெல்லை:


    பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாச்சலபேரி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி (வயது 45).

    இவர் இன்று காலை பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதிக்கு டிராக்டர் ஓட்டி வந்தார்.  தாழையூத்து அருகே வந்தபோது டிராக்டரின் டயர் வெடித்தது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் உயிர் தப்பிப்பதற்காக அந்தோணி டிராக்டரில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தோணி பரிதாபமாக உயிரிழந்தார்.

     இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×