என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maruti"

    • தி ராஜா சாப் படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
    • இந்த படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் 'தி ராஜா சாப்' ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

    பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் மாருதி இயக்க இருக்கிறார். பிரபாஸ் மற்றும் இயக்குநர் மாருதி மீண்டும் இணையும் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு 'தி ராஜா சாப்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

     


    இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட் பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். 'தி ராஜா சாப்' முழுமையான பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. பிரபாஸ் இதுவரை ஏற்றிருக்காத ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் தயாராவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வரா கவனிக்க, வி எஃப் எக்ஸ் பணிகளை 'மகதீரா', 'பாகுபலி' போன்ற படங்களில் பணியாற்றிய கமல் கண்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொள்கிறார்கள். 

    • மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
    • அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மிக சிறந்த கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) இருக்கின்றது. மேலும், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த கார் மாடல் இருக்கிறது.

    மாருதி சுசுகியின் நெக்சா விற்பனை மையங்கள் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் கிராண்ட் விட்டாரா, பிரான்க்ஸ் காம்பாக்ட் எஸ்.யு.வி. மற்றும் XL6 எம்.பி.வி. உள்ளிட்ட கார்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றன.

    பலேனோ, இக்னிஸ் மற்றும் சியாஸ் மாடல்கள் அதே விலையில் தொடர்கின்றன. அதே நேரத்தில் இன்விக்டோ எம்.பி.வி.-க்கு எந்த தள்ளுபடியும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே, மாருதி கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு ரூ.74,000 தள்ளுபடியும், 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ. 66 ஆயிரம் தள்ளுபடி சேர்த்து காரின் விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வரை குறைந்துள்ளது.

    மிட் மற்றும் டாப்-எண்ட் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுக்கு தொடர்ந்து ரூ.64,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் சிக்மா மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் முறையே ரூ.34,000 மற்றும் ரூ.14,000 தள்ளுபடி பெறுகின்றன.

    இந்தியாவில் கிராண்ட் விட்டாரா மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வாகன் டைகுன் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.


    இந்த காரின் விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.19.93 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 103 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதே எஞ்சின் CNG-மேனுவல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 116 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    மாருதி XL6 மீதான தள்ளுபடிகள் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மாடல்களுக்கு ரூ. 40,000 ஆகவும், சிஎன்ஜி மாடல்களுக்கு ரூ. 25,000 ஆகவும் உள்ளது. இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.14.61 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காரில் 103 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த CNG மோடில் இயங்கும் போது 88 ஹெச்.பி. திறன் வழங்குகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • தி ராஜா சாப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
    • படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    பிரபாஸ் சமீபத்தில் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படமான தி ராஜா சாப் படத்தை குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரபாஸ் ஒரு பூங்கொத்தை எடுத்து அதில் உள்ள மலர்களை எடுத்து அவருக்கு அவரே திருஷ்டி கழிக்கும் விதமாக காட்சிகள் அமைத்துள்ளது. மிகவும் ஸ்டைலாக, சமீபத்தில் வந்த படங்களில் ஒப்பிடும் பொழுது இப்படத்தில் கூடுதல் அழகான லுக்கில் இருக்கிறார். இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒசாமு சுசூகி மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சி ஏற்படுத்தியவர்.
    • ஒசாமு சுசூகி இந்தியா மீது அதிகமான பாசம் கொண்டிருந்தார்

    சுசுகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி (94) நேற்று காலமானார்.

    ஒசாமு சுசுகி எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "உலகளாவிய வாகனத் துறையில் புகழ்பெற்ற நபரான ஒசாமு சுசுகியின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரது தலைமையின் கீழ், சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் ஒரு உலகளாவிய சக்தியாக மாறியது. அவர் இந்தியா மீது அதிகமான பாசம் கொண்டிருந்தார். மாருதி உடனான அவரது ஒத்துழைப்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், அவரை நேசிக்கும் எண்ணற்றவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ஏற்காடு கோடை விழாவுக்கு சென்ற மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். 

    இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாக–வுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து கார் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதனால் சாலையில் சென்றவர்கள்  இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

    எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×