என் மலர்
நீங்கள் தேடியது "லாரிக்குள்"
கன்டெய்னர் லாரிக்குள் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் வெளியே எடுத்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் தியேட்டர் பின்புறம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் பவானி செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பி செல்வது வழக்கம். நேற்று மாலை ஒரு கன்டெய்னர் லாரி இந்த பகுதியில் வளைந்து பவானி செல்ல திரும்பியது.
அப்போது சேலம் பக்கமிருந்து வந்த கார் லாரியின் கீழ் பகுதிக்குள் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை. இதனால் அந்த பாதையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 45 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து நேரில் சென்றனர். மீட்பு வாகனம் மூலம் காரை வெளியில் எடுத்து, போக்குவரத்தை சீர் செய்தனர்.