என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொட்டு நீர் பாசனம்"

    • குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது.
    • குடிமங்கலம் பகுதியில் தற்போது குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் குடிமங்கலம் குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிகளவு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல் அவதிப்படுவதை தடுக்கும் வகையில் சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் தற்போது குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.குடிமங்கலம் பகுதியில் ரெட் லேடி ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இது நல்ல சிவப்பு நிறமும் சுவையும் கொண்டது என்பதால் விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பப்பாளி பழங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று பப்பாளிகளை அறுவடை செய்து கொள்கின்றனர் இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி கூறியதாவது. கூடுதல் லாபம் பப்பாளி ரகத்தின் வயது வயது 22 மாதங்கள் ஆகும்குடிமங்கலம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.பப்பாளி கன்றுகளை 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் குழியெடுத்து நடவு செய்யவேண்டும்..பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது மேலும் மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனைகள் குறைவாகவே உள்ளது..பப்பாளி சாகுபடி செய்த 8 மாதங்களில் இருந்து அறுவடைக்கு தயாராகும். பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்றாலும் பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது. பப்பாளி செடியின் வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்காத அளவில் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பப்பாளி 8மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து 14மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.வியாபாரிகள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து பழங்களை அறுவடை செய்து கொள்வதால் விவசாயிகளுக்கு செலவு குறைவாகவே உள்ளது. பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்

    • சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படும்.
    • இதில் விருப்பமுள்ள விவசாயிகள் கபிலர்மலை வேளாண்மை துறையை அணுகவும்.

    பரமத்திவேலூர்:

    கபிலர்மலை வேளாண்மை துறை அலுவலர்கள் வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படும் . இதில் விருப்பமுள்ள விவசாயிகள் கபிலர்மலை வேளாண்மை துறையை அணுகவும். சொட்டுநீர் பாசனம், மானியத்தில் அமைத்து தர தேவையான ஆவனங்கள் சிட்டா, அடங்கல், எப்எம்பி, ஆதார் கார்டு நகல்,ரேசன் கார்டு நகல்,போட்டோ சிறு, குறு விவசாயிக்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவைகள் ஆகும். இவற்றை கொண்டு வந்து வேளாண்மை துறை அலுவலகத்தில் சமர்பித்து பயின்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விலை நிலங்களில் மணிலா, நெல், தர்பூசணி, கரும்பு, எள,கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வது வழக்கம்.
    • குறைந்த செலவின் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    விழுப்புரம்:  

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கந்தாடு, நடுக்குப்பம், ஓவி பேர், அடசல், புதுப்பாக்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் மணிலா, நெல், தர்பூசணி, கரும்பு, எள,கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை நடவு செய்வது வழக்கம். இதுபோன்ற விவசாய பயிர்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இந்நிலை யில் இப்பகுதியில் கடந்த பருவ மழையின் போது சராசரி மழை அளவை விட குறைந்த அளவில் மழை பொழிந்தது. இதனால் இங்குள்ள பெரும்பாலான நீர் நிலைகள் முற்றிலும் நிரம்ப வில்லை. இதன் காரணமாக தற்பொழுது பல நீர் நிலைகள் வறண்டு வரும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விலை நிலங்க ளில் குறைந்த தண்ணீரில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய முருங்கையை சொட்டு நீர் பாசன மூலம் அதிக அள வில் பயிர் செய்துள்ளனர். இதுபோல் சொட்டு நீர் பாசனம் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள முருங்கை நன்றாக செழித்து வளர்ந் துள்ளது. இந்த முருங்கை மூலம் ஒரு ஆண்டுக்கு மேலாக காய்கள், கீரைகள் போன்ற வற்றை குறைந்த செலவின் மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    காற்றிலிருந்து வாழை மரங்களை பாதுகாக்க புதிய யுக்திகளை பயன்படுத்துகிறோம்.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறிப் பயிர்கள் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, வாழை, உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் சாகுபடி படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கு கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாமை, வருமானம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ள நிலையில் தற்போது சொட்டுநீர் பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வாழை சாகுபடியை பொறுத்தவரை நடவு முதல் அறுவடை வரை ஓராண்டு காலத்தில் பருவ மழை, காற்று, கோடை என எல்லாப் பருவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பருவமழை போதுமான அளவில் பெய்யாத ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

    அதுபோன்ற சூழலிலும் வறட்சியால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது வாழை மரங்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதுடன் கடும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது.

    இதனால் தான் பல விவசாயிகள் வாழை சாகுபடியை கைவிட்டு காய்கறி உள்ளிட்ட மாற்றுப்பயிர்களுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாழை சாகுபடியில் ஈடுபடும் போது இழப்பை தவிர்க்க முடியும். அந்த வகையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

    அதுபோல காற்றிலிருந்து வாழை மரங்களை பாதுகாக்க புதிய யுக்திகளை பயன்படுத்துகிறோம். அதன்படி ஒவ்வொரு மரத்துக்கும் ஊன்று கோல்கள் கொடுத்து பாதுகாப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊன்றுகோல்கள் அமைத்து மற்ற வாழைகள் எல்லாம் பிளாஸ்டிக் கயிறுகள் மூலம் எதிரெதிரான திசைகளில் ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டி விடுகிறோம்.

    இவ்வாறு கட்டுவதால் எந்தத் திசையிலிருந்து காற்று பலமாக வீசினாலும் வாழைகளுக்கு ஏதும் ஏற்படுவதில்லை. செலவும் குறைகிறது. இதன் காரணமாக வாழை சாகுபடி லாபகரமானதாக உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    ×