என் மலர்
நீங்கள் தேடியது "டெஸ்ட் சாம்பியன்ஷிப்"
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.
- வங்கதேசத்தை வென்றதன் மூலம் இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா, வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திற்கு முன்னேறி இறுதி வாய்ப்பை வசப்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா அணி 13 டெஸ்ட்களில் 9 வெற்றி ஒரு தோல்வி, 3 டிராக்களுடன் 120 புள்ளிகளுடன் 76.92% என்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது.
இந்திய அணி வங்கதேசத்தை வென்றதன் மூலம் 13 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி, 2 டிரா என 87 புள்ளிகளுடன் 55.77% எடுத்து 2-ம் இடத்தில் உள்ளது.
3-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா 54.55%, இலங்கை 53.33% 4-ம் இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை.
- 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் கேஎல் ராகுல் சதமடித்து 149 ரன்கள் அடித்தார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மாவுடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் டெக்னிக்கல் அளவில் குறைபாடுகள் இருப்பதாகவும் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் தான் விளையாட வேண்டுமென்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன்.
குறிப்பாக பந்து நகரும் போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார். எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இல்லை.
ஆனால் ஃபைனலுக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் இறுதிபோட்டி எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்று அவர் கூறினார்.
அவர் கூறுவது போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய கில் 28, 8 என 2 இன்னிங்சிலும் சுமாராகவே செயல்பட்டார்.
மறுபுறம் 2021-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் 2018-ல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் விளாசிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான அவர் ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
புதுடெல்லி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரே லியா அணிகள் மோதுகின்றன.
இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது.
இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான அவர் ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
- இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.
- 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது.
எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன். ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.
மேலும் 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.
துபாய்:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், ராஞ்சி டெஸ்டில் பெற்ற இந்தியாவின் வெற்றிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
அதில், 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 சதவீதம் பெற்று அதே இடத்தில் நீடித்து வருகிறது. முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது. 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 4வது இடத்தில் வங்காளதேசமும் உள்ளது.
5 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் உள்ளன.
- பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.
- முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.
மேலும் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் சுப்பிரமணியம் பத்ரிநாத் கலந்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மண்ணைக் கவ்வி உள்ளது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது
இந்த தொடரில் சுப்மன் கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். மொத்தமே 93 ரன்கள் தான் எடுத்தார். எனவே தோற்றுப்போன கோபத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கில் பக்கம் திருப்பியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் பத்ரிநாத், ஒரு பேட்டராக சுப்மன் கில் ரன்களை அடிக்கவில்லை.
அது முடியாவிட்டாலும், களத்தில் அதிக நேரம் விளையாடி பந்தை பழையதாக்குவதோ, பவுலர்களை சோர்வடையவோ செய்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.
ஒருவேளை கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராக இருந்திருந்தால், எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார்.