என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரூப் 2 தேர்வு"

    • தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள்.
    • குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் குரூப் 2 பிரதானதேர்வு (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்தத் தேர்வை 55 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

    மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21-ந்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதான தேர்வு இன்று நடந்தது.

    காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு நடந்தது. கேள்வித்தாள்கள் இருந்த பண்டலை பிரித்து வினியோகம் செய்தபோது சிறிது குழப்பம் ஏற்பட்டது.

    தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். இந்த குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது.

    இதன் காரணமாக சில மையங்களில் சற்று தாமதமாக தொடங்கியது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெற உள்ளது.

    இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதி வருகிறார்கள். அவர்களில், 27 ஆயிரத்து 306 பேர் ஆண்கள். 27 ஆயிரத்து 764 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

    இந்தத் தேர்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

    சென்னையில் 8 ஆயிரத்து 315 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    • விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் குரூப் 2 தேர்வு எழுதினார்கள்.
    • விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    பல்வேறு துறைகளில் குரூப் 2 பிரிவுகளில் உள்ள 5446 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தில் 9,94,890 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 55,071 பேர் முதல் நிலை தேர்வில் தகுதி பெற்றனர்.

    அதனை தொடர்ந்து முதன்மைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 186 மையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் தேர்வு எழுதினார்கள். இன்று காலை தமிழ் தகுதி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதனை தேர்வாணையத் தலைவர் முனியநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. இவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்றும், எங்கெல்லாம் தேர்வுகள் காலதாமதமாக தொடங்கப்பட்டதோ, அங்கெல்லாம் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர் முனியநாதன் கூறினார்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 2 தேர்வு இன்று காலையில் தொடங்கியது. அப்போது அங்கிருந்த அறை எண் 6-ல் தேர்வெழுதியவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த தேர்வர்கள் அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டனர். இதையடுத்து வினாத்தாள் குழப்பத்தை அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் தேர்வு மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம்.

    பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த பிப்.25 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 முதன்மைத் தேர்வில், பலமுறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அன்று காலை நடைபெற்ற தமிழ் தகுதித்தாள் தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமாகி உள்ளது. பல மையங்களில் விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு ஏற்கனவே தாமதமாக ஆரம்பித்ததால், போட்டியாளர்கள், தங்கள் பதிவெண்களைக் கவனிக்க நேரமில்லாமல், விடைத்தாளில் விடைகளைப் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் மீண்டும் விடைத்தாள்களை வரிசை எண் படி மாற்றி வழங்கியிருக்கின்றனர். இந்த குளறுபடிகளிடையே, போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் ஏற்கனவே வினாக்களுக்கான பதில்கள் நிரப்பப்பட்டு இருந்ததாகவும், அவற்றை திருத்த கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை எனவும், போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மீண்டும் தேர்வு தாமதமாகியிருக்கிறது. இதனால், மாலை நடந்த தேர்வும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. தேர்வாணையம் செய்த தவறுகளுக்கு, அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம், இத்தனை அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதைவிட அதிர்ச்சியளிப்பது, தேர்தல் ஆணையத்தின் விளக்கம். 'முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகும். ஆகையால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது' என்றொரு விளக்கத்தைத் தேர்வாணையம் அளித்திருக்கிறது. பல லட்சம் மாணவர்களின் கனவான ஒரு முக்கியமான தேர்வுக்கு, தேர்வாணையம் தரும் மரியாதை இதுதான். 'கட்டாயத் தமிழ்த் தேர்வு' என்பது வெறும் ஒரு சடங்குதான். அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். திமுக அரசு தரப்பில் இருந்து, இதற்கு யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை. அரசுப் பணித் தேர்வுகளுக்காகத் தீவிரமாக படித்துப் பயிற்சி எடுத்த இளைஞர்களை, இதைவிட யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள், தங்களின் அத்தனை நாள் உழைப்பை வீணடித்துவிட்ட கோபத்தில் இருக்கிறார்கள். இத்தனை முறைகேடுகளுடன் நடந்த தேர்வு முடிவுகள், நியாயமாக இருக்கப் போவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

    அது மட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள், 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று உறுதியளித்த திமுக அரசு, இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அரசுப் பணித் தேர்வுகளுக்காக அயராது உழைத்து, தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒட்டு மொத்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தி, அரசு இயந்திரத்தை முடக்கிய திமுக, உடனடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையிழந்துவிட்ட இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்க, உடனடியாக, அவர்கள் கோரிக்கையான, மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து, இனியாவது, இது போன்ற முறைகேடுகளையும் குளறுபடிகளையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்".

    • குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
    • குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிப்பு.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

    5446 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த மெயின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிப்பு

    குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல், மிச்சாங் புயலால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

     

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.
    • பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம் செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

    பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடை முறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
    • தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

    இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ தேர்வின் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, தேர்வு எழுதியவர்கள் www.tnpscresults.tn.gov, www.tnpscexams.in இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

    இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 தேர்வர்களில் 5,83,467 தேர்வர்கள் முதல்நிலை தேர்வு எழுதினர்.

    குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கு அணுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி வெளியிடபட்டது.

    குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    மொத்தமாக குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கு 21,822 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு OMR ஷீட் முறையிலேயே நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கணினி (CBT Mode) வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜூன் மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
    தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.

    மொத்தம் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

    5 நாட்களில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியான விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் எனவும்  கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஜூன் மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்.. காவல்துறை குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாறவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    ×