என் மலர்
நீங்கள் தேடியது "காங்கயம் நகராட்சி"
- தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா்.
- வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
காங்கயம் :
காங்கயம் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா். இந்த கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.
இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி 'சீல்' வைத்தனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை உள்ளிட்ட கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
- ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது.
காங்கயம்
காங்கயம் நகராட்சியில் பதுமன் குளம் உள்ளது. இந்த குளம் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கயம் நகராட்சி 18-வது வார்டு அகிலாண்டபுரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4கோடியில் பதுமன் குளம் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த குளத்தினை தூர்வாரி குளத்தினை சுற்றியுள்ள கரைகளை கான்கிரீட் சுவர் கொண்டு பலப்படுத்தும் பணிகள், குளத்தினை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தும், கம்பிவேலிகள், சுற்றிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தும், குளத்தின் முகப்பு பகுதியில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தம், காவலர் அறைகள் அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும்.
- சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கயம்:
காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் நகர பொதுமக்கள் காங்கயம் நகராட்சிக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பொதுமக்கள் மேற்கண்ட சொத்து வரியை செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் சொத்து வரியை வரும் 30 -ந் தேதிக்குள் செலுத்தி பயனடையவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
- 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
காங்கயம் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 2023-24ம் ஆண்டுக்கான சொத்து வரியினை ஏப்., 30ம் தேதிக்குள் செலுத்தினால், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டிருந்தது. இதனால், காங்கயத்தில் ஏப்., 30ம் தேதியன்று, சொத்து வரியில், 25 சதவீதத்தை வசூல் செய்து, தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவ்வகையில், நகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி, 16,702 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து, 3 கோடியே, 54 லட்சம் வசூல் செய்யப்பட வேண்டும். இதில், 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வரி வசூல் தொகையில், 25 சதவீதம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சிப் பகுதியில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக குடிநீா் இணைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சியின் அனுமதி பெறாமல் குடிநீா் இணைப்புகள் குறித்து கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக குடிநீா் இணைப்பு துண்டிப்பு செய்வதோடு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காவல் துறை மூலம் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கயம்:
காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கயம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் பொது நூலகத்துறை மூலம் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முழு நேர கிளை நூல கத்தினை திறந்து வைத்தார்.
மேலும் 2-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.62 கோடியில் வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக தினசரி மற்றும் வாரச்சந்தை கடை கள் கட்டும் பணியினையும், 7-வது வார்டு அண்ணா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.4.4 கோடியில் பதுமன் குளம் நிலைய மேம்படுத்துதல் பணியினையும் தொடங்கி வைத்தார்.
13-வது வார்டு சமுதாய கழிப்பிடம் கட்டும் திட்டத் தின் கீழ் ரூ.25 லட்சத்தில் காங்கயம் நகராட்சி சத்யாநகர் பகுதியில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணியினையும், காங்கயம் நகராட்சி 13-வது வார்டு கே.ஜி.கே.நகரில் சமுதாய கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத் தில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணியினையும் என மொத்தம் ரூ.14.56 கோடியில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.
விழாவில் காங்கயம் நகராட்சி தலைவர் ந.சூரியபிரகாஷ், காங்கயம் தி.மு.க. மேற்கு நகர பொறுப்பாளர் காயத்ரி பி.சின்னச்சாமி, நகராட்சி ஆணையாளர் வெங்க டேஸ்வரன், செயற்பொறியாளர் திலீபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.