என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் கைது"
- மதுபானக்கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில், பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் இயங்கி வரும் தனியார் மதுபானக்கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வழக்கம் போல் கடை மூடப்பட்டது. இந்த கடையில் நெடுங்காடு பொன்பற்றி கிராமத்தைச்சேர்ந்த பாஸ்கர் (வயது60). காவலாளியாக இருந்தார். நள்ளிரவு திடீரென கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், கடையை திறக்குமாறு வற்புதியுள்ளனர். காவலாளி மறுக்கவே, மர்ம நபர்கள் காவலாளியை தாக்கி, கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபானங்களை திருடிகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து, பாஸ்கர், கடை உரிமையாளர் மற்றும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடை வாசலில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகேவுள்ள விழிதியூரைச் சேர்ந்த ஜெகன் (23), நளன் குளம் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர், அவர்களிமிமிருந்து, ரூ.1 லட்சத்து 43 பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். (சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. திருட்டு நடந்த ஒரு சில மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த திருநள்ளாறு போலீசாரை, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பாராட்டினார்.
- போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
- சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற டாடா இண்டிகா வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த காரில் ஹான்ஸ் 20 கிராம் அளவு கொண்ட 2250 பாக்கெட்டில் 45 கிலோவும், கூல்லிப் 9 கிராம் அளவு உள்ள 720 பாக்கெட்டில் 6.480 கிலோவும் விமல் பாக்கு 2.8 கிராம் அளவுள்ள 4500 பாக்கெட்டில் 12.600 கிலோவும் வி.ஐ. பாக்கு 8.4 கிராம் அளவுள்ள 1800 பாக்கெட்டில் 18.00 கிலோவும் உள்ள போதை பொருட்களை இருந்தது.
விசாரணையில் சிதம்பரம் கூளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 29) அதே கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி (வயது 47) ஆகியோர் 65 கிலோ குட்காவை கடத்தி வந்துள்ளனர்.அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் சேலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரிடத்தில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்துள்ளனர் .என்பது தெரிய வந்துள்ளது. போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
இதில் சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
- மதுபானங்களை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் மதுபானக் கடையில் இருந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
- மது பிரியர்களுக்கு 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது கிடைக்கிறது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரை சுற்றி புற்றீசல் போல் பெருகிவரும் சந்து கடைகளால் சிலர் மதுபானங்களை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் மதுபானக் கடையில் இருந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மது பிரியர்களுக்கு 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது கிடைக்கிறது. இதனால் தினக்கூலி செல்பவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து அதிரடி சோதனை மேற்கொண்டார்.அப்போது புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சரவணன், குத்தலஹள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துலிங்கம் ஆகிய இருவரை கைது செய்து. அவர்களிடம் இருந்து 40ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 400 மதுபான பாட்டிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை பாலக்கோடு போலீசார் தேடி வருகின்றனர்.
- அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மொடக் குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி னர். அப்போது ராசாம் பாளையம் பகுதியில் 2 பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் போலீசை கண்ட தும் தப்பி ஓடினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரி த்தனர். இதில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த அஜீத் (22), ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா (29) என்பதும் அவர்கள் வீட்டில் கஞ்சா வை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதனையடுத்து ராசாம்பாளையத்தில் உள்ள பாலாவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ேமலும் பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல் நேரில் சென்று விசாரனை நடத்தி னார்.
இதில் லாரி டிரைவரான பாலா முகாசி அனுமன் பள்ளியை சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் கஞ்சா வாங்கி ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, லக்காபுரம், 4 6புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அஜீத், பாலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கணேசன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர்.
- கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையம்-கணூவாய் ரோட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து வடவள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த லட்சுமி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 53), நரசிம் நாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (38) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் குமார் (வயது42). இவர் தள்ளுவண்டியில் கூழ் மற்றும் மோர் விற்பனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அங்கு கல்லாபெட்டியில் இருந்த பணத்தை சோனிராஜா (54), சிவக்குமார் (51) ஆகியோர் திருட முயன்றனர்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- அறையில் பீரோவில் இருந்த 1¾ சவரன் நெக்லஸ், ½ சவரன் தோடு உள்ளிட்டவை காணமாமல் போய் இருந்தது.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
சரவணம்பட்டி,
கோவை கீரணத்தம் சைபர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவ சகாயம்(65). நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள சர்ச்சுக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் பீரோவில் இருந்த 1¾ சவரன் நெக்லஸ், ½ சவரன் தோடு உள்ளிட்டவை காணமாமல் போய் இருந்தது.இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்களை நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தேவசகாயம் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர். கோவில்பாளையம் போலீசார் சரவணம்பட்டி- கீரணத்தம் சாலையில் கல்லுகுழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தென்காசி மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த சுபாஷ்(25), உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த ஜெகன்(34) என்பதும், நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகைகளையும் மீட்டனர்.
- கல்லூரிகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது
கோவை,
கோவை சூலூர் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கி படித்து வருகின்றனர்.
தற்போது கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சூலூர் போலீசாருக்கு நீலாம்பூர் அண்ணா நகரில் சிலர் கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதனை பதுக்கி வைத்து இருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிரண்தாஸ் (வயது 21), அருள் கிருஷ்ணன் (21), ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வருவது தெரிய வந்தது. ெதாடர்ந்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் (35) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் ஜவுளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் (58) என்பவர் சாராயம் விற்றதாக அவரையும் போலீசார் கைது செய்தனர்.
- வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது.
கடலூர்:
வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வடலூர் பால்காரன் காலனியில் வசிக்கும் முருகையன் (55), என்பவர் பேப்பர் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது. அதன்அடிபடையில் கடையை சோதனை செய்தபோது, ஹான்ஸ் புகையிலை பாக்கெட் பண்டல் வைத்திருந்த 2 பேரையும் கைது செய்தனர்.
- டேன் டீ நிர்வாகத்தை மூடி விட்டு அந்த இடத்தை வனப்பகுதிக்கு ஒப்படைக்க போவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, பொன்.ஜெயசீலன் மற்றும் அ.தி.மு.கவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனாவில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட வளர்ச்சி கழகம்(டேன் டீ) உள்ளது.
இந்த நிலையில் டேன் டீ நிர்வாகத்தை மூடி விட்டு அந்த இடத்தை வனப்பகுதிக்கு ஒப்படைக்க போவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தொழிலாளர்களை பாதுகாக்க கோரியும், டேன் டீ நிர்வாகத்தை மூடும் திட்டத்தை திரும்ப பெற கோரியும் வால்பாறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி அறிவித்து இருந்தார்.
கார் வெடிப்பு சம்பவத்தை ெதாடர்ந்து கோவையில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
அனுமதியையும் மீறி இன்று காலை அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் கூடலூர் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், நகர செயலாளர் மயில் கணேசன் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்காக வால்பாறை பழைய பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, பொன்.ஜெயசீலன் மற்றும் அ.தி.மு.கவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் முதுநகர் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கடலூர் சுத்துக்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
சந்தேகமடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக வாகனத்தில் இருந்த 2 நபர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் சுப்பிரமணியபுரம் சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 38) ஜெய்பிரகாஷ் (வயது 27) நாகராஜ் (வயது 38), அருள் தாஸ் (வயது 40) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கர் மற்றும் ஜெய்பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.