என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு தொழிற்சாலைகள்"

    • பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி கூறி உள்ளார்.
    • மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் ரங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    சிவகாசியை அருகே கிச்சனாயக்கம்பட்டி, எம்.புதுப்பட்டி அருகே ரெங்க பாளையம் பகுதிக ளில் நடந்த பட்டாசு ஆலை விபத் துகளில் பெண்கள் உட்பட 14 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந் துள்ளனர். உயிரிழந்த அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை விருதுநகர் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும் இந்த கொடூர விபத்தில் காயம் அடைந்த வர்கள் வெகு விரைவில் குண மடையவும், அவர்க ளுக்கு உரிய தகுந்த சிகிச்சை அளித்திடவும், உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத் திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் இலவச வீடு மற்றும் வழங்கி டவும் கேட்டுக்கொள்கி றேன்.

    தமிழக முதல்-அமைச்சர் இதில் கடுமையான நடவடிக் கைகள் எடுத்து இனி இப்படி ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த வர்கள் குடும்பங்களில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் பட்டாசு நிறு வனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிடவும், விபத்துகள் ஏற்படாத வகையில் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக கடைபிடித்திட அதிகாரிகள் தக்க வகையில் உறுதி செய்ய வேண்டும் எனவும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாக்பூர் உரிமம் பெற்ற ஸ்பார்க்ளர் எனப்படும் கம்பி மத்தாப்பு உற்பத்தி ஆலைகள் 100 இயங்கி வருகின்றன. கம்பி மத்தாப்பு எலக்ட்ரிக், கலர், கிரீன், ரெட் என 4 விதமான மத்தாப்புகள் தயாரிக்கப்படுகின்றது.

    இதில் ரெட் தவிர மற்ற மூன்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்திதான் தயாரிக்க முடியும். பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.

    கம்பி மத்தாப்பு ஆலைகளில் ரெட் எனப்படும் மத்தாப்பு மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனை தயாரிக்க ஸ்ட்ரான்சியம் நைட்ரேட் என்ற சிவப்பு உப்பு பயன்படுத்தப்பட்டது. இதில் 2 சதவீதம் பேரியம் நைட்ரேட் கலந்து இருப்பதாக கூறி மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கம்பி மத்தாப்பு ஆலைகளில் ஆய்வு செய்து உரிமத்தை ரத்து செய்தனர் .

    இதனால் விரக்தி அடைந்த கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 2-ந்தேதி முதல் ஆலைகளை மூடினர். 45 நாட்களுக்கு மேலாகியும் கம்பி மத்தாப்பு ஆலைகள் இயங்கவில்லை. இந்த தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது . கம்பி மத்தாப்பு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது என எந்த இடத்திலும் கூறவில்லை.

    சிவப்பு உப்பை பயன்படுத்தி ஒரு வகை மத்தாப்பு மட்டும் தயாரித்தாலும், பெசோ அதிகாரிகள் ஆலையின் உரிமைத்தை ரத்து செய்கின்றனர். இந்தியாவில் 95 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் கம்பி மத்தாப்பு உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது .

    ஆனால் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கெடுபிடி இல்லாமல் கம்பி மத்தாப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

    இதனால் சிவகாசி பட்டாசு வியாபாரிகள் வெளிமாநிலங்களில் கம்பி மத்தாப்புக்கு ஆர்டர் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆலைகள் மூடப்பட்டதால் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என கம்பி மத்தாப்பு தயாரிப்பாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
    ×