search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 ஆலைகளுக்கு"

    சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 11 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில், பெரும்பாலானவை சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகின்றன. இவற்றை ஆற்றில் கலப்பதால்  சுத்தமான  தண்ணீர் மாசடைகிறது.

    இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், அலர்ஜி, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கால்நடைகளும், மீன்களும் பாதிக்கப்படுகின்றன.

    வழக்கமாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் சமீபகாலமாக எடுப்பதில்லை.  இதனால்    சென்னை மாசுகட்டுபாட்டுவாரிய தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்,  விதி மீறி செயல்பட்ட சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதன் தொர்ச்சியாக நேற்று முன்தினம் பள்ளிப்பாளையத்தில் சமயசங்கிலி, ஆவத்திபாளையம், களியனூர் சுற்றுவட்டாரத்தில்   11 சாய ஆலைகளுக்கும்  மாசுகட்டுபாட்டுவாரியம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து 11 சாய ஆலைகளுக்கும்  சீல் வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    ×