என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "safety equipment"

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தை தடுக்க போக்குவரத்து-நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • எஸ்.பி. ஷியாமளா தேவி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபகரணங்கள் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி சாலை போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் 89, ஒளிரும் பட்டைகள் 25, சோலார் ஒளிரும் விளக்குகள் 32 மற்றும் ஒளிரும் செங்குத்து கூம்புகள் 63 என மொத்தம் 184 முன்னெச்சரிக்கை சாலை பாதுகாப்பு உபகரணங்களை நகர, நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் வழங்கினார்.

    இந்த பாதுகாப்பு உபகரணங்கள் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் வைக்கப்படவுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நிருபர்களிடம் கூறியதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பது, அதிவேகத்தில் பயணிப்பது, தவறான பாதையில் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றி செல்வது என என பல்வேறு பிரிவுகளில் 24 ஆயிரத்து 230 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியதாக 11 ஆயிரத்து 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டு இதுவரை நடந்த சாலை விபத்துகளுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் (தனிப்பிரிவு), மதுமதி (நகர போக்குவரத்து), சுப்பையா (நெடுஞ்சாலை போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கலந்து கொண்டனர்.

    • கையுறைகள், முகக்கவசம், மழை கோட் வழங்கப்பட்டது
    • 70 பேர் பணியாற்றி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.

    இந்த பேரூராட்சியில் தூய்மை பணிகளில் 70 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம், மழை கோட் உள்பட பாதுகாப்பு உபகரணங்களை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் வழங்கினார்.

    அப்போது இளநிலை உதவியாளர் மனோகர், சுகாதார மேற்பார்வையாளர் வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இரண்டு வகை தொழில் இனங்களில் பதிவு செய்தோர், பாதுகாப்பு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்க்கும் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள், பாதுகாப்பு உபகரணம் பெற உடனே விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. அமைப்புசாரா ஓட்டுனர் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, ஷூ, சீருடை மற்றும் முதலுதவி பெட்டி அடங்கிய உபகரணம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில், இரண்டு வகை தொழில் இனங்களில் பதிவு செய்தோர், பாதுகாப்பு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

    தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), காமராஜ் நகர் முதல் வீதி, பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், திருப்பூர் - 641602 என்கிற முகவரியில் வேலை நாட்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2477276 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

    ×