என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LIC"

    • இந்த திட்டம் ‘ஆப்லைன்' மற்றும் ‘ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.
    • ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.

    சென்னை :

    எல்.ஐ.சி. மண்டல மேலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எல்.ஐ.சி. ஆப் இந்தியா கடந்த 5-ந்தேதி முதல் பென்ஷன் (ஆன்டியு) திட்டமான புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்களை உயர்த்தி உள்ளது. அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒத்திவைப்பு காலத்தின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ.1,000-க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரையில் பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன.

    ஒற்றை பிரிமீய திட்டமான இந்த பாலிசியில் பாலிசிதாருக்கு தனிநபர் மற்றும் கணவர், மனைவியுடன் கூடிய 'ஜாயிண்ட் லைப்' ஒத்திவைக்கப்பட்ட பென்ஷனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

    இந்த பாலிசி, பணியில் இருப்பவர்களுக்கு அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு, குறிப்பிட்ட ஒத்திவைக்கப்பட்ட காலத்துக்குப்பின் நிலையான பென்ஷன் வருமானத்தை அளிக்கக்கூடியது. முதலீட்டுக்காக உபரியாக பணம் வைத்திருப்போருக்கும் ஏற்றது.

    இந்த திட்டம் இளம் வயதினர் தங்களது ஓய்வுகாலத்தை சிறந்த வகையில் திட்டமிட வழிவகுக்கிறது. பாலிசியின் தொடக்கத்திலேயே வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உத்தரவாதமாக அளிக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.

    புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் வருடாந்திர பென்ஷன் தொகையை எல்.ஐ.சி.யின் இணையதளம் மற்றும் பல்வேறு எல்.ஐ.சி. ஆப்களில் உள்ள கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம். இந்த திட்டம் 'ஆப்லைன்' மற்றும் 'ஆன்லைன்' மூலமாகவும் கிடைக்கிறது.

    மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள எல்.ஐ.சி. கிளையை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன.
    • எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    மும்பை :

    இந்தியாவின் 'நம்பர் 1' கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.

    அது, அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. அந்நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்கள் மீது தெரிவிக்கப்படும் முறைகேடுகளை மறுத்துள்ள அதானி குழுமம், இது இந்தியாவுக்கு எதிரான சதி என்று கூறியுள்ளது.

    அதேவேளையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளதால், அவற்றுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் எழுந்துள்ளது.

    இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவனம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. சார்பில் ரூ.36 ஆயிரத்து 474 கோடியே 78 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்த டிசம்பர் 31-ந்தேதியன்று ரூ.35 ஆயிரத்து 917 கோடியே 31 லட்சமாக இருந்தது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த வாங்கு மதிப்பு ரூ.30 ஆயிரத்து 127 கோடியாகவும், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி அதன் சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரத்து 142 கோடியாகவும் உள்ளது. அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு, எல்.ஐ.சி.யின் மொத்த முதலீடுகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு' என்று தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை எல்.ஐ.சி. தெரிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாக உள்ளது.

    • எல்.ஐ.சி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது.
    • தனிநபர் பிரிவில் 1.29 கோடி தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை :

    கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 9 மாத காலத்தில் எல்.ஐ.சி.யின் மொத்த பிரீமிய வருவாய் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 244 கோடியாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 673 கோடியாக இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், பிரீமிய வருவாய் 20.65 சதவீதம் அதிகம் ஆகும்.

    இதேபோல 9 மாதத்தில், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.22 ஆயிரத்து 970 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே சமயத்தில் ரூ.1,672 கோடியாக இருந்தது.

    நடப்பு காலத்தில் லாப உயர்வுக்கு காரணம், ரூ.19,941.60 கோடி (வரிகள் நீங்கலாக), 'நான் பேர்' கணக்கில் இருந்து முதலீட்டாளர்கள் கணக்குக்கு மாற்றப்பட்டதே ஆகும். எல்.ஐ.சி.யின் வணிகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. அதன் விளைவாக, 9 மாதங்களுக்கான முதல் வருட பிரீமிய வருவாய் அடிப்படையில் எல்.ஐ.சி.யின் ஒட்டுமொத்த சந்தை பங்கு 65.38 சதவீதம். இது கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 61.40 சதவீதம் ஆக இருந்தது.

    இதேபோல, 9 மாதத்தில் தனிநபர் பிரிவில் 1.29 கோடி தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 1.26 கோடியாக இருந்தது. இது 1.92 சதவீதம் அதிகம் ஆகும். எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர் நம்பகத்தன்மை, சொத்துகளின் சந்தை மதிப்பு, புது வணிக லாப விளிம்பு போன்ற செயல்திறன் வழிகாட்டிகள் அனைத்திலும் நல்ல முன்னேற்றத்தை 3-வது காலாண்டு முடிவுகள் காட்டியுள்ளது.

    இதுகுறித்து, எல்.ஐ.சி.யின் தலைவர் எம்.ஆர்.குமார் கூறுகையில், "இலக்கை அடைவதில் நாங்கள் உறுதியாக முன்னேறி வருகிறோம். வளர்ந்து வரும் காப்பீட்டு சந்தையில் எங்கள் சந்தை பங்களிப்பை தக்க வைப்பது மட்டுமல்லாமல் அதிகரித்து முன்னேறி செல்வோம் என திடமாக நம்புகிறோம்" என்றார்.

    மேற்கண்ட தகவல் எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • கடந்த ஒரு மாதத்தில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மும்பை:

    அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்தவிதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    இதைத்தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக சில காலமாக செய்தி பரவி வந்தது.


    இந்நிலையில், இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘எல்.ஐ.சி’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருந்தது.


    இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் என்று இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு 'எல்.ஐ.சி' என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் 'எல்.ஐ.சி' என்கிற பெயரை 2015-ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

    இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால், 'எல்.ஐ.சி' என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார்.


    அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.

    'எல்.ஐ.சி' என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • எல்.ஐ.சி. என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு.
    • தங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும் விதமாக இந்த படத்தின் தலைப்பு இடம்பெற்றுள்ளது.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.


    இந்நிலையில், 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. நிறுவனம் சார்பில் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீஸில், எல்.ஐ.சி. என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.


    மேலும், தங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை குறைக்கும் விதமாக இந்த படத்தின் தலைப்பு இடம்பெற்றுள்ளது என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்த நோட்டீஸை பெற்றுக் கொண்ட 7 நாட்களுக்குள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும், வேறு பெயரை சூட்ட வேண்டும் இல்லை என்றால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் 'எல்.ஐ.சி' படத்தில் சீமான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விவசாயி கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகவும் கோயம்புத்தூரில் நடைபெற்ற நான்கு நாட்கள் படப்பிடிப்பு இவர் கலந்து கொண்டதாகவும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

    • இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் 'எல்.ஐ.சி' படத்தின் படப்பிடிப்பு தள ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஷோஃபா விற்கும் வீடியோ மூலம் சமூக வலைதத்தில் பிரபலமான 'Sofa Boy' சிறுவன் முகமது ரசூல் படக்குழுவினரை விற்பது போன்று காமெடி செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவில் 'எல்.ஐ.சி' டீம் நியூ பப்ளிசிட்டி மேனேஜர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
    • இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் தனது முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து எஸ்.ஜே. சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "இந்த அன்புக்கு மிக்க நன்றிகள் விக்னேஷ் சிவர் சார், லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் எனது முதல் நாள் படப்பிடிப்பை வெகுவாக ரசித்தேன். எனது பெர்ஃபார்மன்சில் நீங்கள் எதிர்பார்த்தவைகளை நான் மிகவும் விரும்பினேன். தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஆவலாக எதிர்நோக்குகிறேன். காட்சிக்கு நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கொடுத்திருக்கும் தோற்றம் வாவ் சொல்ல வைக்கிறது," என குறிப்பிட்டுள்ளார். 



    • மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார்.
    • அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளிவந்த ஜவான் படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடித்தார். இந்தி சினிமாவில் நயந்தாராவிர்கு கதாநாயகியாக முதல் படம் இதுவே. இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜவான் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி படத்தில் நடித்தார்.

    நயன்தாரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மொழி வேறுபாடின்றி பல முக்கியமான நட்சத்திர பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தார்த் மற்றும் மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக அவரின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கி கொண்டிருக்கும் எல்.ஐ.சி படத்திலும், தனி ஒருவன் 2, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி கதாப்பாத்திரமாக நயன் தாரா நடிக்கவுள்ளார். இப்படமானது பெண்களை மையமான கதைக்களம் ஆகும். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    சசிகுமார் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஒரு வித சமூக கிளர்ச்சியை உண்டாக்கும். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகினார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. . நடிகர் சூரி, உன்னி முகுந்தன் மற்றும் சசிக்குமார் இணைந்து கருடன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தககது.

    மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் சசிகுமார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிக உற்சாகத்துடன் இருக்கின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
    • அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

    தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது. படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர். இந்த படத்தில் இவர்களின் ஜோடி மிக அழகாக திரையில் பிரதிபலித்து இருந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.

    கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அனீருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியதாக விக்னேஷ் சிவன், அவரின் மகனான உயிர் மற்றும் உலகுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×