என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 333077
நீங்கள் தேடியது "கோட்டார் அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த வேண்டும்"
முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் குமரி மாவட்டம் வருகை தந்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மனு அளித்தார்.
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் குமரி மாவட்டம் வருகை தந்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தபோது, அதனை நிராகரித்து எந்த வித பணிகளையும் மேற் கொள்ளாமல் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.
குறிப்பாக 300 படுக்கை வசதி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை கட்டிடம், புற்றுநோய் சிகிச்சை மையம், படுக்கை வசதிகள் கொண்ட கண் சிகிச்சை வார்டு கட்டிடம் ஏற்படுத்த வேண்டும்.
இதயவியல் துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, சிறு நீரகவியல் துறை, புற்று நோய் மருத்துவ சிகிச்சை பிரிவு, வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை ஆகியன ஏற்படுத்த வேண்டி உள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புகள் ஏற்படுத்துவதற் காக மூளை மற்றும் நரம்பி யல் துறை, மனநலத்துறை, தோல் சிகிச்சை துறை ஆகியன ஏற்படுத்த வேண்டும்.
அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி தமிழக முதல்வர் துணை முதல்வ ராக இருக்கும்போது 2009-2010-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவம னையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு உள்ளது. இங்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை 200 படுக்கை வசதியாக உயர்த்திட வேண் டும்.
தற்போதுள்ள 60 மாண வர்கள் சேர்க்கையை 100 மாணவர்களாக அதிகரிக்க வேண்டும். ‘பே வார்டு‘ வசதி இங்கு தொடங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இம்மருத்துவமனை கட்டிடங்களில் உள்ள தரைத்தளம், குளியல் அறை ஆகியவற்றை இன்றைய கால சூழலுக்கு தகுந்தார் போல் மாற்றி அமைக்க வேண்டும். ரத்த பரிசோதனை நிலையம் தரம் உயர்த்த வேண்டும். ஆட்டோ அனலைசர், தைராய்டு பரிசோதனை உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X