என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assistant Director"

    • பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
    • கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட, கனிமவளத் துறை உதவி இயக்குநராக பணியாற்றியவா் வள்ளல். இவரை, பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத், கனிமவளத் துறை உதவி இயக்குநா் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா். இதையடுத்து தமிழக கனிமவளத் துறை ஆணையா் வெளியிட்ட அறிவிப்பில், உதவி இயக்குநரை பணியில் இருந்து விடுவிக்க கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    இதைத்தொடா்ந்து மீண்டும் திருப்பூா் மாவட்ட உதவி இயக்குநராக வள்ளல் பணியில் சோ்ந்தாா். இந்நிலையில், திருப்பூா் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வள்ளல், சென்னை கிண்டி கனிமவளத்துறை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக கனிம வளத் துறை உதவி இயக்குநராக சச்சின் ஆனந்த் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். 

    • தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
    • அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ( பொ ) புவனேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    தமிழ்நாட்டில் தமிழ் மொழியினை வளர்க்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் இடையே பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள்,பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் அரசு அலுவலக நடைமுறைகளில் தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.

    மேலும் கோப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் போன்றவற்றை தமிழில் கையாள்வது குறித்து ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தத்தப்பட்டு உள்ளது.

    மேலும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காத நிறுவனங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார்.
    • விடுதலை 1, விடுதலை 2 ஆகிய படங்கள் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி, அடுத்தகட்ட முயற்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

    சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளார்.

    இந்த படத்தை தயாரிக்கும் ஆர்எஸ் இன்போடெய்ன்மென்ட், சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது" என அறிவித்துள்ளது.

    இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இதற்கு முன்பு செல்ஃபி என்கிற படைத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தகது.

    பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் நடந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டுப்புதூர் சமுதாய கூடம், நடந்தை, புளியம்பட்டி சமுதாய கூடம், ராமதேவம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் கோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்து, நேரலையில் உரையாற்றினார். 

    மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், கோதூர் வருவாய் கிராம விவசாயிகள்   கலந்து கொண்டனர். விழாவில் கலந்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் மானியத்துடன் கூடிய தென்னங் கன்று, கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான், பயிர் வகைகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகள், பாரம்பரிய தோட்டக்கலை இடுபொருட்கள், பழச் செடிகள், மரச் செடிகள், நெகிழிக்கூடை, பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. 

    வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் இடுபொருட்கள் விநியோக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி அட்மா தலைவர் தனராசு, பரமத்தி பேரூராட்சித் தலைவர் மணி ,மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    ×