என் மலர்
நீங்கள் தேடியது "alankulam"
- ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியான பணியாளர்களை தேர்வு செய்தனர்.
ஆலங்குளம்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகன், ஆலங்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில் கலந்துகொண்ட 425 பேரில், தேர்வு செய்யப்பட்ட 125 பேருக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.
- ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பேரின் வீட்டில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்தில் சோதனை நடத்தினர்.
- அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் மற்றும் கதிரேசன்.
இவர்கள் 2 பேரின் வீட்டில் டன் கணக்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக தென்காசி மாவட்ட பறக்கும் படைக்குக் கிடைத்த தகவலின் பேரில் பறக்கும்படை தாசில்தார் பட்டமுத்து மற்றும் அதிகாரிகள் கரும்பனூர் கிராமத்திற்கு விரைந்தனர்.
அப்போது அங்கு இருவர் வீட்டிலும் 2 டன் அளவுள்ள ரேஷன் அரிசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த தாசில்தார் பட்டமுத்து அவற்றை ஆலங்குளம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
- ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
- கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கொரோனா, டெங்கு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜான் ரவி, கவுன்சிலர்கள் சாலமோன்ராஜா, பழனி சங்கர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் முகைதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர் ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் செல்வின்துரை, ஆனஷ்ட் ராஜ் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு, அதிகாரிகள் தரப்பில் பதில் தரப்பட்டது.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கிடாரக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காசிக்குவைத்தான் கிராமத்தில், மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டாட்சியர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஆண்டி வரவேற்றார்.
பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு, அதிகாரிகள் தரப்பில் பதில் தரப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில், சமூக பாது காப்பு திட்ட வட்டாட்சியர் செல்வி பத்மகுமாரி, வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்சமது, வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம், கால்நடை மருத்துவர் ராமசெல்வம், தலைமைக் காவலர் செந்தில்ராணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாதவி ஆனந்தராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெகத்குரு, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- நான்கு வழிச் சாலை பணியின் போது ஆலங்குளம் பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன.
- மரங்களை வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பகுதியில் நான்கு வழிச் சாலை பணியின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இருப்பினும் சில மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மழை நன்கு பெய்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மரங்களை வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே நடவு செய்த மரக்கன்றுகளுக்கு வாரந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடந்து அதிகளவு பனை விதைகளும் விதைக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் இச்செயலுக்கு ஆலங்குளம் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81).
- இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாதேவர் (வயது 81). இவர் நேற்று அவரது ஊரில் இருந்து ரெட்டியார்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, அய்யாதேவர் சென்ற மொபட்டின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அய்யாதேவர் சம்பவ இடத்திலலேயே இறந்தார்.
இதுதொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான ரெட்டியார்பட்டி அருகே ருக்மணி யம்மாள்புரத்தை சேர்ந்த எபனேசர் அகஸ்டின் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
- தொடக்க விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார்.
- புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம்அருகே மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதன் பணி தொடக்க விழா நடந்தது.
பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முக ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரூ.12 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பட்டியில் இருந்து காமராஜ் நகருக்கு புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் தொழிலதிபர் மணிகண்டன், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலவிநாயகம், துணைத் தலைவர் வேல் துரை, ஓடைமறிச்சான் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் திராவிட மணி, ஒன்றிய பொருளாளர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் சங்கீதா, இயேசுராஜன், சிவலார்குளம் முத்தையா, மருதம்புத்தூர் கிளை செயலாளர் அருணாச்சலம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.
- அரசு பள்ளி ஆசிரியர் முருகையா உள்பட 7 பேரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
- ஒரே கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 7 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
ரூ.15 லட்சம் கொள்ளை
புதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அந்தோணி (வயது 57), பொன்சிவ ராமச் சந்திரன்(40), ஆலங்குளம் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் முருகையா(49), அதே பகுதியில் வசிக்கும் லாசர்(39), வீரபுத்திரன்(40), காந்தி நகரில் உள்ள மனோஜ் பிரபாகரன், திருமணி ஆகியோரின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது.
மொத்தம் 7 வீடுகளிலும் கொள்ளை யடிக்கப்பட்ட நகை, ரொக்கப்பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து வீட்டு கதவுகளும் ஒரே விதமாக உடைக்கப்பட்டிருந்ததால், ஒரே கும்பல்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என போலீசார் கருதுகின்றனர்.
2 தனிப்படைகள் அமைப்பு
இதுதொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு கும்பலை தேடி வருகின்றனர். இதே காம ராஜ் நகர் பகுதியில் கடந்த மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் வீட்டில் ஒரு கும்பல் ரூ. 20 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.
அதுகுறித்து இதுவரை துப்பு துலங்காத நிலையில் போலீசாரின் மெத்தன போக்கால் தற்போது 7 வீடு களில் திருட்டு நடந்துள்ள தாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
- ஆலங்குளம் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லுரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
- இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் , இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் மாணவிகளை வழி நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா, லக்ஷயா ஆகியோர் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் இயற்கை முறை வேளாண்மை குறித்து விவசாயிகளிடையே விளக்கி கூறினர். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினர்.
மேலும் இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் சலுகைகளையும், நன்மைகளையும் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர். செயற்கை உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை பற்றிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.
- ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சந்தேகப்படும்படியான இடங்களில் சோதனை செய்தனர்.
அப்போது ஆ.மருதப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வராஜ்(வயது 34) என்பவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அவற்றை வாலிபர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வராஜ் பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது. இவர் மீது கொலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆலங்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் மாடுகளுக்கு மாலை அணிவித்து, பூ, பொட்டிட்டு, உணவு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில கலை இலக்கிய அணி துணைத் தலைவர் ஆலடி சங்கரையா, ஆலங்குளம் தெற்கு வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், தென்காசி மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து, பூ, பொட்டிட்டு, உணவு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர பொதுச் செயலாளர் அருமைநாயகம், ஆலங்குளம் தொகுதி ஆர்.ஜி.பி.ஆர்.எஸ். தலைவர் ஏசுராஜா, நகரப் பொருளாளர் பிரதாப், வேல்குமார் ராமசாமி, செல்லக்கனி, செல்லக்கிளி, மாடக்கண், செல்வம், வேலாயுதம், சுந்தரம், பொன்னுத்துரை, குருவன்கோட்டை கிருஷ்ணன், மாரியப்பன், காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் லிவிங்ஸ்டன் விமல் நன்றி கூறினார்.
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் அய்யனார்குளத்தில் நடைபெற்றது.
- முகாமில்அய்யனார்குளம் ஊராட்சித் தலைவர் நீதிராஜன் முன்னிலை வகித்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்டாரம், வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் அய்யனார்குளத்தில் நடைபெற்றது.
உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். அய்யனார்குளம் ஊராட்சித் தலைவர் நீதிராஜன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம், விதை ஆய்வாளர் சண்முகையா ஆகியோர் பேசினர். கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் வட்டாரத்தில் தங்கி வேளாண் குறித்து அறிய வந்திருக்கும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் லக்ஸயாஸ்ரீ, கவிதா ஆகியோர் வெர்டிசிலியம் லெக்கானி பயன்பாடு குறித்து விவரித்தனர்.
முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.