search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarthirunagari"

    ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட விழா நடைபெற்றது. விழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் 2021- 22 -ம் ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி கூறியதாவது:-

    2021-22-ம் ஆண்டில் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், வெள்ளமடம், கச்சனாவிளை ஆகிய கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் மற்றும் மானிய விலையில் இடு பொருட்கள் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

    இத்திட்டத்தின் தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள், கைதெளிப்பான்கள், வரப்பு பயிராக பயிரிட ஏதுவாக உளுந்து விதைகள் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மண்புழு உரங்கள், மரக்கன்றுகள், வீட்டுத்தோட்ட விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் வெள்ளமடம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜேஸ்மின் கலந்து கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை விளங்கினார். கருங்கடல் மற்றும் கச்சனாவிளை கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருட்களை விளங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை, விதைசான்று துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வை வட்டார வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
    ×