என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெட் பேங்கிங்"

    • சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான்.
    • சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார்.

    அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார். பாட்டியின் கணக்கில் நிறைய பணம் இருந்துள்ளது. பாட்டியின் கணக்கை பயன்படுத்துவது பற்றி சிறுமி தனது பள்ளித் தோழர்களிடம் கூறியுள்ளார்.

    அவர்களின் ஒரு மாணவன் இதை தனது மூத்த சகோதரனிடம் கூறியுள்ளான். அந்த சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். சிறுமியின் சமூக வலைதள கணக்கை அறிந்து அவருடன் நட்பாக அந்த இளைஞன் பழகியுள்ளான்.

    சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த மோசடி தொடங்கி சுமார் 8 மாத காலங்களாக நடந்து வந்திருக்கிறது.

    இளைஞன் கேட்ட போதல்லாம் சிறுமி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை தனது பாட்டியின் கணக்கிலிருந்து தனது செல்போன் நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளாள். இவ்வாறு சுமார் ரூ.50 லட்சம் வரை சிறுமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

    ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் போகவே, சிறுமி படித்து வந்த டியூசன் சென்டருக்கு சென்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளார். இதை கண்ட டியூசன் டீச்சர் சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.

    சிறுமியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணை தொடங்கியதிலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    முக்கிய குற்றவாளி நவீன் (28) நேற்று கைது செய்யப்பட்டான். நவீனிடமிருந்து ரூ.5 லட்சத்தையும், ஒரு டெபிட் கார்டையும் போலீசார் மீட்டனர். நவீன் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

    சிறுமியிடம் மோசடியாகப் பெறப்பட்ட தொகையில் இதுவரை ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்டு மூலம் பேமண்ட் ஏற்க தடை விதித்து உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி 2020 ஆண்டு வாக்கில் உத்தரவிட்டு அதற்கான கால அவகாசத்தை வழங்கி இருந்தது. 

    இந்த நிலையில், கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோக்கென் வழங்கும் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் புது சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். 

    இதுமட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் ரொக்கம் தவிர்த்து யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    “ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் இனி ஆப்பிள் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 
    ×