என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற"

    • மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாலுகா அலு–வலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றிய–மைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்பப்–படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    மேலும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்–பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பவானி தெரிவித்துள்ளார்.

    4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி படிப்பு அங்கீகாரம் பெற சேலம், நாமக்கல் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்வி அமைச்சகம் அழைப்பு
    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி அமைச்சகம் தேசிய கவுன்சில் வகுத்துள்ளபடி ஆசிரியர் கல்விக்கான 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பில்  இணைய கல்வி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது. 

    தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி பி.ஏ பி.எட் .,  பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பரிசார்த்த அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில்  சேருவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.

    கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் படி இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதில் ஒரு மாணவர் ஆசிரியர் கல்வியோடு சேர்த்து தனக்கு வேண்டிய கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் பட்டம் பெற உதவுகிறது. 

    இந்த ஒருங்கிணைந்த படிப்பானது அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், உள்ளடக்கிய கல்வி மற்றும் இந்தியா மற்றும் அதன் மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஒரு அடித்தளத்தை நிறுவும்.

    கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகாரம், விதிமுறைகள் மற்றும் நடைமுறை) திருத்த விதிமுறைகள், 2021-ஐப் பார்க்கவும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே மாதம் 1 -ம் தேதி முதல் மே மாதம் 31 -ந்தேதி (இரவு 11:59 மணி வரை) சமர்ப்பிக்கலாம்.

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில்  ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்  பல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×