என் மலர்
முகப்பு » சேவல் சூதாட்டம்
நீங்கள் தேடியது "சேவல் சூதாட்டம்"
அரச்சலூர் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய அரச்சலூர் ரவணனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
அரச்சலூர் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய அரச்சலூர் ரவணனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் பழையபாளையம், கதிவேரிகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மறைவான இடத்தில் வைத்து சிலர் சேவலை வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது, இதில் 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் பிடிபட்டார். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முருங்கதொழுவு, பழைய பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன்(27) என்று தெரியவந்தது.
இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
×
X