என் மலர்
நீங்கள் தேடியது "தேதி நீட்டிப்பு"
சேலத்தில் நடைபெற உள்ள உதவி பேராசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
சேலம்:
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வுகள் இந்திய அரசின் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிப்டுகளாக நடைபெறும். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு காகாபாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022-ம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ேதர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இந்த மாதம் 20-ம் தேதி என அறிவித்து இருந்தது.
இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி வரை என நீட்டித்து உள்ளது. இந்த தகவலை யூ.ஜி.சி. சேர்மன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.