என் மலர்
நீங்கள் தேடியது "கண் பரிேசாதனை"
மதுக்கூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
மதுக்கூர்:
மதுக்கூர் அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வைசிய சங்கமும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.
கண்புரை , சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெ ழு த்து உள்ளிட்ட பிரச்சனை களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 465 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 198 பேர் அறுவை கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த முகாமில் மதுக்கூர் அரிமா சங்க தலைவர் மனோகரன், செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் வினோத், மாவட்ட தலைவர்கள் பண்ணீர்செல்வம், கோவிந்த ராஜ் மற்றும் சுப்புக்கண்ணு, ரவிசந்திரன், சுரேஷ் , நந்தகு மார், நடேசன், கோவிந்தன், கருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.