என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small"

    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் வருகிற 21-ந் தேதி முதல் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவு களை விரிவு படுத்துவதற்கும், உற்பத்தி யை பன்முகப் படுத்து வதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    விருதுநகர் மாவட்ட சிவகாசி கிளை அலுவல கத்தில் (முகவரி:-98/சி4 சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2-வது தளம், சிவகாசி 626 123, விருதுநகர் மாவட்டம்;) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா முகாம் வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.150 இலட்சம் வரை, வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.NEEDS திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.

    • சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 75,000 வரை முதலீட்டு மானியத்தை கலெக்டர் வழங்கினார்.
    • சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் கடன் பெற்று பயன்பெற்று வரும் வாடிக்கையாளர் களை கலெக்டர் கவுர வித்தார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    சிறப்பு தொழிற்கடன் விழாவில் 11 விண்ணப்பதாரர்களிடமிருந்து ரூ.11.74 கோடி மதிப்பில் புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    நீட்ஸ் திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாமில் வருகிற 1-ந்தேதி சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்/தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மண்டல மேலாளர் முருகேசன், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகத்தின் தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட செங்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.
    செங்கோட்டை:

    தமிழ்நாட்டில் தென்மாவட்டத்தில் சின்ன வெங்காய சாகுபடியில் தென்காசி மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 800 ஏக்கர்  பரப்பளவில்  சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

    மேற்குதொடர்ச்சி அடிவார பகுதியான செங்கோட்டை தாலூகா வுக்கு உட்பட்ட செங்கோட்டை நகர்பகுதி, கணக்கபிள்ளை வலசை, சீவநல்லூர், இலத்தூர் சித்திராபுரம், நெடுவயல், அச்சன்புதூர் சிவராமபேட்டை, கொடிகுறிச்சி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் ஆண்டுதோறும்  சாகுபடி செய்யப்படுகிறது. இதனைநம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதி விவசாயிகள் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஆகிய முன்று மாதங்களில் பூமகசூலான வெங்காயம்,  மல்லி, துவரை, மோச்சை, பயறு வகைகள் உள்ளிட்ட வைகளை தென்மேற்கு பருவமழையை நம்பி பயிரிடுவர்.

    அவற்றுள் பெரும்பாலானோர் 70 நாள் பயறும் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்வது வழக்கமாக செய்துவருகின்றனர்.

     ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட 600கிலோ தேவை, இதற்கான உள்ளி விதைகளை திண்டுக்கல் பகுதிகளிலிருந்து ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை வாங்கிவந்துள்ளனர். இவ்வாறு பயிரிட சாராசரியாக உழவு, பாத்தி கெட்டுதல், இயற்கை உரம் என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்கின்றனர்.

    70 நாட்களுக்கு பின் ஒரு ஏக்கருக்கு 7000 முதல் 7200 கிலோ சின்ன வெங்காயம் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பாண்டில் தென்காசி மாவட்டத்தில் 800 ஏக்கருக்கு மேல் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்தனர்.

     இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் சின்ன வெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் பயிறுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

    பெரும்பாலானோர் இயற்கை உரங்களான மண்புழு, எறுசாணம், வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணை உள்ளிட்டவையே உபயோகித்து வருவதால் இங்கு விளையும் சின்ன வெங்காயத்திற்கு மதிப்பு கூடுதல் என்பதால் வியாபாரிகள் வாங்கி செல்வதில் அதிகளவில் ஆர்வம்  காட்டிவருகின்றனர்.
    ×