என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்ட கும்பல்"

    • 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சூதாட்டக்காரர்கள் சூதாட்டம் நடத்தி வருவதாக அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவருடைய தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலநாதன், சக்திவேல் மற்றும் போலீசார்கள் நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோட்டப்பட்டி பெரிய ஏரி மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட 15 பேரின் விவரம் வருமாறு:-

    ராஜா முகமது (வயது 43), சக்கரை (51), கணேசன் (45), சிலம்பரசன் (28), கருணாகரன் (53), குமார் (57), மகராமூர்த்தி (51), அஜித் (26), பழனிசாமி (52), வினோத்குமார் (33), தனபால் (49), செல்வம் (52), ராஜா (65), கலையரசன் (32), பெரியசாமி (46).

    இவர்கள் சேலம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தலைமறைவான கன்ஸ்வாட்டர், அஜித், குமார், சங்கர், தங்கப்பா, குப்பன், ராஜகோபால் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கைதானவர்களிடம் இருந்து ரூ.5,77,345 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது.
    • ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது. மருந்தாளுனர் பூவழகன் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி மற்றும் சூதாட்டக் கும்பலை காவல்துறை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஆதரவளித்த அரசியல் பிரமுகர்கள் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடமலைக்குண்டுவில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்
    வருசநாடு:

    கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கரட்டுப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது தனபாலன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து அங்கிருந்த சீனிவாசன், மாடசாமி, நரிமுருகன், வீரபாண்டி, கருப்புசாமி, ஈஸ்வரன், அண்ணாத்துரை, ராமர், பெருமாள், கண்ணன், சுருளிவேல் உள்பட 12 பேர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.48630 பணத்தையும் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×