என் மலர்
நீங்கள் தேடியது "England"
- பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
- பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்
இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.
அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பை என அழைக்கப்படுகிறது.
- இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.
இந்த நிலையில் இந்த முடிவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்தின் இந்த முடிவு பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த முடிவு இந்தியா-இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது. சமீபத்திய வீரர்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்குவதற்காக இங்கிலாந்து வாரியம் எந்த இந்திய வீரரையாவது அணுகினால் அவர்கள் அதை மரியாதையுடன் மறுக்க வேண்டும்.
இது நமது 2 முன்னாள் கேப்டன்களின் மரியாதைக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
- இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
3- வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி 24 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 26 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும், மார்க் வுட், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 127 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். 171 ரன்கள் வரை சென்றது மிகையானது. வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அவர் நேர்த்தியுடன் பந்து வீசுவது நல்ல பலனை கொடுக்கிறது. இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்
இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷீத் மிக சிறப்பாக பந்துவீசினார். எங்களை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவே ஆதில் ரஷீத் அனுமதிக்கவில்லை. அதனால்தான் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.