என் மலர்
நீங்கள் தேடியது "இஸ்ரேல்"
- இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.
- ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
ஈரான் ஆதரவு பெற்ற பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கியது.
இதில் ஏவுகணை, டிரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுதகிடங்குகள், ராணுவ தளங்கள் சேதமடைந்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியானார்கள் என்றும், ராணுவ தளங்கள் சிறிது சேதங்கள் ஏற்பட்டது என்றும் ஈரான் தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை முறியடித்து விட்டதாகவும் தெரிவித்தது.
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளிலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.
இதற்கிடையே ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும் அது போன்ற தவறை செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறும் போது, இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்நாட்டுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது.
அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார்.
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறும் போது, ஈரானுக்கு அதன் நலன்கள், அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் மக்களைப் பாதுகாப்பதில் எந்த வரம்புகளும் இல்லை என்றார். இதன் மூலம் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக கருதப்படுகிறது.
- உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
- ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதில் அவரது சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45 ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 100 இஸ்ரேல் கைதிகள் வரை உள்ள நிலையில் காசாவில் ஹமாஸ் பிடியில் இருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை இஸ்ரேல் அரசு எட்ட வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் டெல் அவிவ் நகரில் நேதன்யாகுவை கண்டித்து பேரணி நடத்தினர்.
அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்தின் மூத்த அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் 14 மாத கால போரை நிறுத்த தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கினர், ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பிலும் நேர்மறையான முடிவு எட்ட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.