என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.ஜே. பாலாஜி"

    • இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    ரன் பேபி ரன்

    ரன் பேபி ரன்


    இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் லவிதா எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    • கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது

    நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

     

    சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் வெளியிட்டுள்ளது.

    நவம்பர் 29 அன்று திரையரங்குகளில் உங்களுக்கு ஒரு அசாதாரண சினிமா அனுபவம் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டு ரிலீஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி கேரியரில் இது முக்கியத் திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
    • சூர்யா 45 படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், சூர்யா நடிக்கும் 45-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    அதன்படி சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்துது.

     


    இந்த நிலையில், சூர்யா 45 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் லப்பர் பந்து புகழ் ஸ்வஸ்விகா நடிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

    இவர் இதற்கு முன் மெர்சல், பிகில், ஜவான், கில்லாடி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×