என் மலர்
நீங்கள் தேடியது "ஆர் ஜே பாலாஜி"
- சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
- படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது
படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கவுள்ளனர்.
படத்தின் இசையமைப்பு வேலைகள் தொடங்கியுள்ளது. இசையமைப்பாளர் சாய் அபியங்கரும் ஆர்.ஜே பாலாஜியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். எனது சிறந்த நடிப்பைக் வெளிக்கொண்டு வந்த இயக்குனர் கோகுலுக்கு நன்றி. 'எல்.கே.ஜி 2', 'மூக்குத்தி அம்மன் 2' போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன்" என்று பேசினார்
- நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார். இந்த கூட்டணி புதியதொரு கூட்டணியாக இருப்பதால் திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் அருவாள், குதிரை என இடம் பெற்றுள்ளதால்.
இப்படம் ஒரு தெய்வீக ஃபேன்டசி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தில் சூர்யாவுக்கு ருக்மிணி வசந்த் மற்றும் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஷ்மிரா பர்தேஷி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
திரைப்படத்திற்கு கருப்பு என தலைப்பாக இருக்கும் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய மற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
- சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் நேற்று வெளியிட்டுள்ளார்.
ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.
கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சொர்கவாசல் பாலாஜிக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது. ஆகஷன் அதிரடி என காட்சிகள் அமைந்துள்ளது. முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார் கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சூர்யாவின் 45 திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவுள்ளார்.
- ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக ஹேப்பி எண்டிங் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி கடைசியாக சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சூர்யாவின் 45 திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவுள்ளார். இப்படம் ஒரு ஃபேண்டசி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தகவல் வெளியானது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்குமுன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக ஹேப்பி எண்டிங் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான அம்மாமுத்து சூர்யா இயக்கவுள்ளார். படத்தின் இசையை ஷான் ரோல்டன் மேற்கொள்கிறார். படத்தின் டைட்டில் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டைட்டில் டீசரின் காட்சிகள் மிகவும் ரத்தம் தெரிக்க தெரிக்க இடம் பெற்றுள்ளது. பாலாஜி அவரது காதல் தோல்வி கதைகளை கூற கூற இந்த வீடியோ அமைந்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தம்மன் மேற்கொள்கிறார். இப்படத்தை குட் நைட், லவ்வர் போன்ற வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர்.ஜே. பாலாஜி `சொர்கவாசல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.
படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.
கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள போஸ்டரில் ரத்த கறை படிந்த கைகள் பிச்சை கேட்பது போல் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
+2
- ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
- ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வித்தியாசமான முறையில் இருந்ததும் ரசிகர்களைக் கவர்ந்தது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களத்துடன் அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கலந்துக் கொண்டனர்.
படத்தின் டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளால் நிறைந்துள்ளது. திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர் ஜே பாலாஜிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத சிறையில் நடக்கும் வன்முறை மற்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் கதைக்களத்தை மையமாக இயக்கப்பட்ட திரைப்படமாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா அடுத்த திரைப்படமான சூர்யாவின் 45-வது படத்தில் நடித்து வருகிறார்.
- சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படக்குழு எதிர்ப்பார்த்த அளவு வசூலை பெறவில்லை கங்குவா திரைப்படம்.
இதை தொடர்ந்து சூர்யா அடுத்த திரைப்படமான சூர்யாவின் 45-வது படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஆர்.ஜே.வாக இருந்து 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சூர்யா 45-ன் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. படத்தில் லப்பர் பந்து புகழ் ஸ்வஸ்விகா நடிக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து படத்தின் ஒளிப்பதிவாளரை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஜிகே விஷ்ணு மேற்கொள்கிறார். இவர் இதற்கு முன் மெர்சல், பிகில், ஜவான், கில்லாடி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்